திங்கள், 25 நவம்பர், 2013

தமிழன்னையின் தனையனே வாழியவே


தமிழன் என்ற இனம்
தலைகளை நிமிர்த்த
தரணியில் உதித்தான்
தானைத் தலைவன் எங்கள் கோபுர கலசம்


சிற்றலைகள் கொஞ்சி விளையாடும்
சிறப்பான வல்வை மாநகரில்
சித்தங்குளிர் திருக்கார்த்திகையில்
சிறுத்தைபுலி இவன் திசைகள் வெளிக்க உதித்தான்

கற்கின்ற போதிலும் அண்ணன்
கருதினான் தமிழரை தமிழை
கடிதென முடிவெடுத்தே
கல்வியை உதறி களமாட புகுந்தான்

ஒற்றைத் துப்பாக்கியில் ஆரம்பித்து
ஒரு பெரும் படை அமைத்து
ஒப்பரும் மிக்காருமற்ற தலைவனாய்
ஒன்றாக்கினான் ஒடுங்கியிருந்த தமிழரை

கொடிகொண்ட மன்னவனே கரிகால் சோழனே
கொடிய சிங்களமஞ்ச கோலோச்சிய கோணமலையரசே
கோமகனே எங்கள் கோல விடிவிளக்கே
கோடிமுறை சொல்வோம் வாழ்க வாழ்கவே

தமிழரின் விடி வெள்ளியே
தரணியில் இணையற்ற தலையே
தமிழன்னையின்  தனையனே வாழியவே
தலைதாழ்த்தி வாழ்த்துகின்றேன் வாழியவே வாழியவே



வல்வையூரான்.



Post Comment

6 கருத்துகள்:

  1. ஒற்றைத் துப்பாக்கியில் ஆரம்பித்து
    ஒரு பெரும் படை அமைத்து
    ஒப்பரும் மிக்காருமற்ற தலைவனாய்
    ஒன்றாக்கினான் ஒடுங்கியிருந்த தமிழரை....

    அருமை....வீரத்தமிழன்....அவன் எங்கள் தானைத்தலைவன்....பரவுக பணி

    பதிலளிநீக்கு
  2. எங்கள் தலைவனை இனிதாக வாழ்த்திய
    உங்கள் கவிகண்டு உவகை கொண்டேன்!
    பொங்கும் கடலலையாய் பெருகும் அவர்புகழ்
    தங்குமே பாரினில் தடையறத் தழைத்து!

    எங்கள் தலைவன் வாழ அவர் இலட்சியம் வெல்ல வேண்டுகிறேன்!

    அருமையான வாழ்த்துக் கவி படைத்தீர்கள் சகோதரா!

    உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

    த ம.4

    பதிலளிநீக்கு
  3. தனித் துப்பாக்கியில் ஆரம்பித்த இயக்கத்தை முப்படைகளையும் கொண்ட பேரரசாக மாற்றிய தலைவர் எங்கள் மேதகு பிரபாகரன்.
    அவருக்கு சூட்டியுள்ள கவிதை அழகு அண்ணா...!

    மாவீரர் தின நல்வாழ்த்துகள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  4. அருமை... அருமை...

    மாவீரர் தின நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.