காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஏப்ரல், 2015

ஹைக்கூக்கள் 34





தொலைத்த கேள்விகளுக்கான தேடல் 
கையிலிருக்கின்றன பதில்கள் 
வாழ்க்கை 




மீண்டும் விரைவில் தேர்தல் வரட்டும் 
போஸ்டர் ஒட்டி பிழைக்கலாம் 
ஏழை கூலி தொழிலாளி 



உன் அன்பும்
சுகமாய் இனி(ணை)க்கின்றது 
நீ என் தம்பி.. 



இன்றும் கடின உழைப்பு, 
ஓய்வு நாளாம் மே தினம்
முதலாளிகளுக்கு 



கால தேவனின் 
பருவ கண்ணாடிகள் 
பெண்மைப் பூக்கள் 



கவிழ்ந்த மதுக்கோப்பையில்
வழிந்து சொட்டிக்கொண்டிருக்கின்றது 
உன் நினைவுகள் 



குப்பை கிண்டுவது
கோழியின் குணம் 
கிளறப்படுகின்றனர் தமிழர் 



பெருவெடிப்பினால் பிரசவம்
தவழும் குழந்தைகள் 
கவிதைகள் 



முட்கம்பி சிறைகளில் சமாதானம்
உலகெங்கும் திறப்படுகின்றன 
அகதி முகாம்கள் 



அடி பட்டாலும் 
திருந்தி கொள்ள விரும்பவில்லை 
உன் மீதான காதல் 

வல்வையூரான்.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

என் இருப்பிடம்


மௌனத்தின் கதவுகள் தட்டப்படுகையில்
மெல்ல எட்டிப்பார்க்கின்றது உன் வெட்கம்
மல்லிகைப் பூவின் வாசம்போலவே
மெல்ல தவழ்கின்றது உன் புன்னகை

செவ்வாய், 29 ஜூலை, 2014

நீ மீளும் நாளேது


காலம் காத்தால
கிழக்கு வெளிக்க முதல்
கருக்கலில் விளக்கெடுத்து
காடுபோய் வந்து

சனி, 19 ஏப்ரல், 2014

நினைவும் வலியும்



வேகமான மழை நாளொன்றில்
சடசடத்தபடி விழுந்தன
பெருந்துளிகள்
மண்ணை கிளறியபடியே
படபடத்த என் மனதை
கிழிக்கும்
உன் எண்ணங்கள் தந்த
வலியை வேதனையை
மிதமாகவே உணர்ந்தேன்,

செவ்வாய், 18 மார்ச், 2014

ஹைக்கூக்கள் 29




கோப்பியிலும் வருகின்றது
போதை
கட்டிலில் நீ தருகின்றாய்

புதன், 31 ஜூலை, 2013

ஹைக்கூக்கள் 18


 
மலர்ந்திருந்ததை கண்டதும்
மீண்டும் மலர்ந்தது
காதல் மனது.

திங்கள், 1 ஜூலை, 2013

உடைந்த போத்தல்கள்

ஏனோ அவள் மனம் மீண்டும் மீண்டும் ஒன்றையே சுற்றி சுற்றி வந்தது. பொன் கிரகணங்களை மெதுவாக வீசி வந்த சூரியன் தன் கைகளை தென்னம் கீற்றுகளுக்கிடையில் விட்டு அவள் கன்னத்தை தொட்டதைகூட அவளால் உணர முடியாமல் இருந்தது.

திங்கள், 4 மார்ச், 2013

கருணை.


பலமுறை அவளைப்
பார்த்ததால் எனக்கு
உண்டானது
அவள் மேல் காதல்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

ஹைக்கூகள் 8







மலரே மலர்களுள் தேடினேன் கொடுப்பதற்கு 
கிடைக்கவில்லை 
உன்போன்ற அழகான மலர்.

திங்கள், 25 பிப்ரவரி, 2013

தமிழ் காத்து வாழ்வோம்




தமிழ் அழகு மொழி - அறிவு
சிறந்தோர் உதித்த மொழி
தமிழுக்கு அழகு ழகரம் - அந்த 
தமிழ் இன்று இழந்தது பல 


செவ்வாய், 29 ஜனவரி, 2013

ஹைக்கூக்கள் 7








மலர்களும் வெட்கி தலைகுனிந்தன
அவை கண்டது
உந்தன் மலர்முகம்.

சனி, 22 டிசம்பர், 2012

ஹைக்கூக்கள் 5



மனங்கள் பாலையாகிப் போனதால்
காற்றில் எங்கோ பறந்து போனது
மனிதமும்.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

தேர் முட்டுக்கட்டை


சந்தோஷ் பருத்தித்துறை சந்தை துவிச்சக்கர வண்டி பாதுகாப்பிடத்தில் தன் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு நிமிரவும் அவன் யாழ் செல்லவேண்டிய 750 பஸ் புறப்பட்டு செல்லவும் சரியாக இருந்தது.
         "ம்...."

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

ஹைக்கூக்கள் 4





பசித்ததால் திருடி
புசித்தான் நஞ்சை
வறுமை.

வெள்ளி, 29 ஜூன், 2012

பள்ளிக்காதல்.



சந்தானத்திற்கு சந்தோசத்தில் மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது. இருக்காதா என்னஅவன் பள்ளி தோழி தனம் என்னும் தனலட்சுமிக்கு மாலையிட உள்ள பொன்னான நாளல்லவா இன்று. இன்னும் சிறிது நேரத்தில் பெண்வீட்டார் மாப்பிள்ளை அழைக்க வந்து விடுவர். 

ஞாயிறு, 20 மே, 2012

மௌனம் பேசியது.



மெதுவாக கண்களைத் திறக்க முயற்சி செய்தாள் அமுதா. தலை விண் விண் என வலித்தது. காலில் வேறு பாரமாக உணர்ந்தாள். 'அட அது .... அம்மாவா?...' நீராவி படிந்த கண்ணாடியூடு பார்ப்பது போல் பார்வை தெளிவற்றிருந்தது.

இரண்டு மூன்று முறை கண்களை மூடித் திறந்தாள் அமுதா. இப்போது பார்வை சற்று தெளிவாக இருந்தது. வலியும் அதிகமாக தெரிந்தது.

" அம்... மா... "

வேதனையில் முனகினாள் அமுதா.

" பிள்ள நான் நிக்கிறன் நீ படு... "

ஆறுதலாக தடவினாள் லலிதா, அமுதாவின் தாய். மெதுவாக மீண்டும் கண்களை மூடினாள் அமுதா. அவள் நினைவுகள் எங்கோ பறந்தது. வலி தெரியாமல் இருக்க அந்த நினைவுகளில் மனதை வலிந்து புகுத்தினாள் அமுதா.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

என் மங்கை


நதியின் ஓடம் போல - சீராய்
நமது காதல் பறக்கும்.
மதியின் முகத்தாள் கூட - மனது
மகிழ்வாய் கலந்து பிறக்கும்.