மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015
இந்தப் போட்டியானது உலகம் தழுவிய அளவில் தமிழ் திரைத்துறைக்கு ஒரு புதிய பாடலாசிரியரை இனம் காண்பதற்கான ஒரு முயற்சி. இந்தப் போட்டியானது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக நடாத்தப்பட்டு, இரகசிய நடுவர்களால் புள்ளிகள் வழங்கப்பட்டு, அதிக சராசரிப் புள்ளி பெறுகின்றவர் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, அவர் எழுதும் பாடல், தயாராகிக்கொண்டிருக்கும் ஒரு புதிய திரைப் படத்தில் இடம்பெறும். அத்தோடு அவருக்கு பிரபல திரைக் கவிஞர்களான திரு பா.விஜய், திரு சினேகன் ஆகியோர் கையொப்பமிட்ட வாழ்த்துச் சான்றிதழும் அனுப்பி வைக்கப்படும்.
போட்டியாளர்களுக்கு நடுவர்களும், நடுவர்களுக்கு போட்டியாளர்களும் அறிமுகமற்ற நிலையிலேயே இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் வரை பேணப்படுவார்கள். அதேபோல இந்த பாடல் எந்த திரைப்படத்தில் பாடலாக்கப்படும் என்பதுவும் இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அறிவிக்கப்படாது பேணப்படும். இது போட்டி முடிவுகளின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
எங்கோ உலகின் ஒரு ஓரத்தில் வாய்ப்புகள் அற்ற நிலையில் வாழும் ஒரு கலைஞனின் வாசலில் வாய்ப்பை கொண்டு சேர்ப்பதே இந்த இலாபநோக்கற்ற போட்டியின் நோக்கமாகும்.
பாடலாசிரியர்களே
நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். கிழே இருக்கும் இணைப்பில் சென்று பாடலின் இசையை பல தடவைகள் கேளுங்கள். பாடல் திரையில் இடம்பெறும் சந்தர்பத்தை நன்கு கிரகித்து கொள்ளுங்கள். அந்த இசைக்கு ஏற்ப சூழ்நிலையை ஒட்டி பாடல் வரிகளை எழுதுங்கள்.
- பாடல் வரிகள் மனதைத் தொடட்டும் .
- புதிய கற்பனையாக இருக்கட்டும்
- சந்தத்தோடு சரியாக பொருந்தட்டும்
- சூழ்நிலைக்கும் mood க்கும் ஏற்றால் போல் இருக்கட்டும்
- பாடலில் நிறைந்த உணர்சிகள் தெரியட்டும்
- புதிய உவமைகள் காணப்படட்டும்
- நவீனத்துவம் தெரியட்டும்
- இனிமையாகவும் கவர்சியாகவும் இருக்கட்டும்
- இன்னொரு பாடலின் சாயல் இல்லாமல் இருக்கட்டும்
- இளமையான வரிகளாக இருக்கட்டும்
பாடல் இடம் பெறும் சூழ்நிலை:
காதலர்களுக்கிடையில்
- ஊடலால் பிரிவு
- பிரிவால் அன்பின் அதிகரிப்பு
- அன்பில் தோன்றும் பரிதவிப்பு
- தடுக்கும் தன்மானம்
- ஏங்கும் மனம்

- போட்டி எதிர்வரும் May 20 கனடா நேரம் நள்ளிரவு 12.00 (UTC -5.00) மணிக்கு நிறைவடையும்.
- போட்டியில் நடுவர்கள் வழங்கும் புள்ளிகள் இறுதியானவை.
- போட்டியில் பங்குபற்றுபவர்கள் இந்த போட்டிக்கு எழுதும் பாடல்களை வெளியில் எங்கும் போட்டி முடிவுகள் வெளியாகும்வரை வெளியிடக்கூடாது.
- போட்டியில் வெற்றி பெற்ற பாடல் திரைப்படத்தின் பாடல் வெளியிடப்படும் வரை வெளியிடலாகாது.
- வெற்றி பெற்ற பாடலை பாடலாசிரியரின் இணக்கப்பாட்டுடன் இசையமைப்பாளர் மற்றும் பட இயக்குனர் இணைந்து தேவைப்பட்டால் திருத்தங்களை மேற்கொள்ளலாம்
- பாடல்கள் அனைத்தும் மின்னஞ்சலில் மட்டும் subject எனும் இடத்தில் “PAADAL” / “பாடல்” என குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
- பாடல்கள் அனைத்தும் தமிழில் unicode எழுத்துருவில் மாற்றப்பட்டு அனுப்பப்பட வேண்டும்.
- போட்டியில் கலந்துகொள்பவர்கள் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கம், வசிக்கும் நாடு என்பன கண்டிப்பாக குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்
பாடல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
போட்டியின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
போட்டியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்
போட்டியின் ஊடக அனுசரணையாளர்கள்
முத்தமிழின் மூச்சுக்காற்று
தமிழருவி வானொலி (இணைய வானொலி) முல்லைமண்ணிலிருந்து முழு உலகெங்கும்
உலகத்தமிழரின் உரிமைக்குரல்
வல்வையூரான்.
Tweet | ||||
போட்டி முயற்சியைப் பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்குஆனால்,
"பிறமொழி கலக்காத பாடலாக
தமிழில் எழுதுங்களேன்!" என
அறிவிப்புச் செய்திருக்கலாமே!
போட்டியில் எல்லோரும் பங்கெடுக்கலாம் தானே...
இவ்வாறான போட்டிகளுக்கு
எனது ஒத்துழைப்பும் உண்டு.
கண்டிப்பாக எல்லோரும் பங்கெடுக்கலாம். திரைத்துறைக்கு தனித்தமிழ் பார்க்க முடியாது என கருதுகின்றனர். திரைத்துறை என்பது வார்த்தக நோக்காக கொண்டது என்பதால் அவ்வாறு நிபந்தனை சொல்லவில்லை. உங்கள் ஆதரவுக்கு நன்றிகள்.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா
எடுத்த காரியம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாப்புனைய உதவும் பதிவோடு
பதிலளிநீக்குஎனது வலைப்பூவில் - தங்கள்
பாடலாசிரியர் போட்டி 2015 ஐ
அறிமுகம் செய்துள்ளேன்!
இணைப்பு:
இசைக்குப் பாடல் புனையலாம் வாருங்கள்
http://paapunaya.blogspot.com/2015/05/blog-post.html
Muyarchikiren.nandri
பதிலளிநீக்கு