திங்கள், 27 ஜனவரி, 2014

ஹைக்கூக்கள் 27.




வீட்டு காவலுக்கு போட்டது
இன்று காவலுக்குள் வைத்திருக்கிறது
காவலரண் முள் வேலிகள்



எனக்கு நன்றாக பொருந்துகின்றது 
நல்ல முகமூடி
என் புன்னகை...



மயிலிறகால் வருடுகின்றாய்
வலிக்கிறது
மயிலை நினைக்கையில்



எட்டி பிடிக்கின்றேன் மேகத்தை 
எட்டி எட்டிச் செல்கின்றது
உன் அன்பு 



இரட்டைத் தண்டவாளத்தில்
எதிரெதிராக ஓடும் கனகதி ரயில்களாக
வரவும் செலவும்.



கவியரசே
கனக்கின்றது தமிழ்
உன்னையும் தன்னையும் நினைத்து.



தூக்கத்திலும் சிரிக்கின்றாய்
மறக்கின்றேன்
என்னை நான்.



சுருக்கென தைத்தது முள்
பட்டென உணர்த்தியது
தாய்மொழி தமிழ் 



பேரூந்தில் நான் உன்னிடம்
விமானத்தில்
என் மனம்



உதடுவைத்து அழுத்தி உறிஞ்சுகின்றேன்
தீர்ந்து போகின்றது தேநீர் 
ஊற்றெடுத்து பாய்கின்றது உன்மேலன்பு.

வல்வையூரான்.

Post Comment

10 கருத்துகள்:

  1. அருமைக் ஹைக்கூக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  2. நல்ல முகமூடியும், என்னை நான் மறந்ததும் மிகவும் கவர்ந்தன...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    மிகச் சிறப்பாக உள்ளது ஹைக்கூக்கவிதை.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    த.ம 3வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பான ஹைகூக்கள் அண்ணா...

    இன்னும் நிறைய எழுதுங்கள்...

    பிடித்தது...!

    உதடுவைத்து அழுத்தி உறிஞ்சுகின்றேன்
    தீர்ந்து போகின்றது தேநீர்
    ஊற்றெடுத்து பாய்கின்றது உன்மேலன்பு.

    பதிலளிநீக்கு
  7. புன்னகை முகமூடி! மயிலிறகு இரண்டும் அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
  9. ///இரட்டைத் தண்டவாளத்தில்
    எதிரெதிராக ஓடும் கனகதி ரயில்களாக
    வரவும் செலவும்////

    அருமை..!!!

    வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

    தொடர வாழ்த்துக்கள் ...!!!

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.