வெள்ளி, 2 மே, 2014

சிணுங்கல்கள்


செல்ல சிணுங்கல்களோடு
மெதுவாக ஆரம்பிக்கின்றாய்
நிதானமாக சிணுங்குகின்றாய்
சின்ன சின்ன விசயங்களில்


உன் சிணுங்கல்கள்
இப்போது ஆரம்பிக்கவில்லை
செல்ல சிணுங்கல்களாய்
சிணுங்கிக்கொண்டே கேட்டாய்

எதிர்வீட்டு கோபு விளையாடும்
பலூன் வேண்டும்
பக்கத்து வீட்டு ஆச்சி மரத்து
புளியங்காய் வேண்டும்

வெடித்து பறக்கும் பஞ்சு
பிடித்து தர வேண்டும்
சன்னதி கோவிலில் விற்கும்
கோன் ஐஸ் வேண்டும்

கடற்கரை ஓரத்து பொறுக்கிய
சிப்பிகள் வேண்டும்
காலூன்றி ஓட சின்னதாய்
சைக்கிள் வேண்டும்

பள்ளி செல்ல காமல்
கொம்பாஸ் வேண்டும்
பல்லாங்குழியில் நீதான்
வெல்லவும் வேண்டும்

அம்மாவின் சேலை
கட்டிக்கொள்ள வேண்டும்
அப்பாவின் சட்டை
போடவும் வேண்டும்

அம்மா அடிக்கும் போது
அவளைப் பிடிக்கவும் வேண்டும்
ஆனந்தமாய் வயதடைகையில்
தாவணியும் வேண்டும்

ஆரங்கள் இரண்டு
அழகாய் வேண்டும்
அடுத்த வீட்டில் இருக்கும்
விலைமிகு பவுடரும் வேண்டும்

இத்தனை சிணுங்கலும்
இயல்பாய் இருந்தது
இன்று உன் சிணுங்கல்
"இவன்தான் எனக்கு மணாளனாய் வேண்டும்"

சிணுங்கல்களாலேயே சிவிக்கின்றாய்
சிரித்து சிமிட்டி சாதிக்கின்றாய்
சிந்திப்பாய் நாளை நீ தாய்
சிணுங்குவாள் உன் மகளும் உன்னிடம்...


வல்வையூரான்

Post Comment

6 கருத்துகள்:

  1. இயல்பான சினுங்கல்கல்தான். நீங்கள் சொல்வது போல கடைசி சிணுங்கலை தாயனபிந்தான் உணர முடியும்.
    நல்ல கவிதை

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அண்ணா

    சின்னச்சின்ன சிணுங்கல்கள் ஒன்றாக சேர்ந்து கவிதை புனைந்த விதம் நன்று வாழ்த்துக்கள் அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. //இன்று உன் சிணுங்கல்
    "இவன்தான் எனக்கு மணாளனாய் வேண்டும்"//

    கொஞ்சம் தர்மசங்கடமான சிணுங்கல்தான்... கடைசி வரியில் சொன்னது சூப்பர்...

    பதிலளிநீக்கு
  4. அட..
    எதார்த்தமான வரிகள் ..

    பதிலளிநீக்கு
  5. அருமையான கேள்வி முடிப்பிள் §

    பதிலளிநீக்கு
  6. சிந்தனை சிணுங்கல்கள் சிறப்பு...
    இறுதியில் புத்திமதியும் சிறப்பு...

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.