வியாழன், 28 ஆகஸ்ட், 2014

ஹைக்கூக்கள் 33உரல் உலக்கைகளை கைவிட்டுவிட்டோம்
தினமும் இடிபடுகின்றோம்
தமிழரானதால்.ஆசையாய் கட்டினோம் மணல்வீடு
அடித்து செல்கின்றது வெள்ளம்
நாங்கள் அகதி சிறுவர்கள்ஏழை வீட்டு ஒற்றை மலர் 
பறிக்கப்படாமலே வாடுகின்றது
வரதட்சனைஅறையப்பட்ட எனக்கான சிலுவைகளை
என்றும் தனதென சுமக்குமன்பு
அம்மாஅழகுற வரையப்பட்ட ஓவியம்
கணத்தில் தாறுமாறாக கிழித்த ஓவியன்
காதல் தற்கொலை.நல்ல விவசாய நிலத்தில்
கூட்டணியமைத்து செழித்து வளர்கிறன விழல்கள்
மக்களவைத் தேர்தல் களம்.அடிக்கடி கனவில்
பொட்டல் மணல் பாலைவனம்
நிலத்தில் என் வீடு?நிலவு அழுக்கடைந்துள்ளதாம்
கழுவி சுத்தப்படுத்துகின்றனர்
தேர்தல் வாக்குறுதிகளால்(????)ரூபாய்க்களில் விசேடதரிசனம்
இறைவனைக் காணவில்லை
தருமதரிசனத்தில் இறைவன்.ஒலித்த மந்திரத்தால் 
ஒளிராத இறைவன் ஒளிர்ந்தான் 
ஏழையின் மனமுருகல்

வல்வையூரான்.

Post Comment

2 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே!

  வல்வையூரார் வார்த்திட்ட வண்ணக் குறுங்கவி!
  இல்லை இதற்கீடு ஏற்று!

  பலதரப்பட்ட உணர்வுக் குவியலாக
  அருமை உங்கள் கவிகள்!
  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.