மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015 போட்டி முடிவுகள்
கடந்த ஏப்ரல் மாதம் 22 திகதி எனது தளத்தால் அறிவிக்கப்பட்ட இந்த போட்டியானது கடந்த மே மாதம் 20ம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தது. மொத்தமாக இருபத்தைந்து கவிஞர்களிடமிருந்து இருபத்தேழு பாடல்கள் போட்டியிட்டன. நான்கு இரகசிய நடுவர்கள் பாடல்களுக்கு புள்ளிகளை இட்டனர். அவர்கள் புள்ளிகளை நிரல்படுத்துவதட்கு அவர்கள் புள்ளிகளின் அடிப்படையில் தரப்படுத்து அவர்கள் தந்த முதலாவது அதி கூடிய புள்ளிக்கு என்னால் 30 புள்ளிகளும் தொடர்ந்து 29, 28, 27... என புள்ளிகள் மீள வழங்கப்பட்டது. நடுவர்களுக்கு பாடல் இலக்கம் ஒன்று முதல் இருபத்தேழு வரை இலக்கமிடப்பட்டே அனுப்பப்பட்டன. இதனால் நடுவர்களுக்கு யார் கவிஞர்கள் என்ற விபரம் இதுவரை தெரியாது.

















