கன்னத்தை வருடிய காற்று
சடசடத்த மழைத்துளிகளில்
துள்ளி எழுந்த மண் மணம்
குண்டும் குழியுமான ரோட்டில்
கடகடத்த வண்டில் சத்தம்
கிறீச் கிறீச் சத்தத்துடன்
தாவாரத்து ஓரத்தில் ஒதுங்கும்
அடைக்கோழியும் குஞ்சுகளும்
அம்மா... என்று அழைத்து
கன்றை அணைக்கும் பசு
வாவா என்று காற்றில் தலையசைத்து
வரவேற்கும் முற்றிய நெல்வயல்
காலைத் தழுவும்
ஜில்லென்ற கடலலை
முற்றத்தில் இருக்கும்
கயித்து கட்டில் படுக்கை
சன்னமாக ஒலிக்கும்
கோயில் மணியோசை
எதுவும் இல்லா வெறுமையில்...
கிர்ர்ர் ... என இரையும்
சில மின்னியந்திரங்கள்
சில கத்திகள்
சில வெட்டும் பலகைகள்
சில புதிய காய்கறிகள்
சில பெயர் புரியாத இறைச்சிகள்
சில கையுறைகள்
சில காலுறைகள்
சில சுத்தம் செய்யும் இரசாயனங்கள்
சில மேசைகள் விரிப்புகள்
சொய் சொய் என
இரைந்தபடி விரையும்
சில வாகனங்கள்
சில ட்ரக்குகள்
என எல்லவற்றையும்
தேடாக்கயித்து மொத்தத்தில்
சில சங்கிலிகள்
சில கைச்செயின்கள் பூட்டி
சூட்டும் பூட்சும் மாட்டி
படமெடுத்து அங்கே அனுப்பி
வேதனையை உள் மறைத்தபடி
வெளிநாட்டில் வாழ்க்கை...
வல்வையூரான்
Tweet | ||||
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குநினைவுகள் சுமந்த பதிவு.... என்ன செய்வது.எல்லாவற்றுக்கும் காலந்தான் பதில் சொல்ல வேண்டும்..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இது தான் வெளிநாட்டு வாழ்க்கை கவிதை அருமை ஐயா!
பதிலளிநீக்குவேதனை ஒருநாள் தீரட்டும்...
பதிலளிநீக்குவேதனை ஒருநாள் தீரட்டும்...
பதிலளிநீக்கு