புதன், 5 மார்ச், 2014

சேர்வோம் அன்பாய்


மனிதரை மனிதராய்
பார்க்கின்ற தன்மையை
மனிதம் கொஞ்சம் கொஞ்சமாய்
இழந்துகொண்டிருக்கின்றது

ஆதியில் வந்த மனிதன்
ஆடைகள் அற்றவனானாலும்
அடுத்த மனிதனை
அணைத்து அன்பு பாராட்டினான்

தன்னை மீறிய சக்தியை
கடவுளாய் கொண்டான்
அதிகரித்த சனத்தொகையில்
பிரிவுகள் கொண்டான்

பிரிந்த பிரிவுகளில்
பிறழ்வுகள் கொண்டான்
பிரியாமலே அன்பினை
கடவுளாய் கண்டான்

அன்பை சிவமென்றான்
அன்பை புத்தனென்றான்
அன்பே கர்த்தனென்றான்
அன்பையே அல்லாஹென்றான்

அனைத்தும் பிரிந்தாலும்
அவற்றுள் ஒன்றானது
அன்பெனும் சக்தி
அகிலத்தின் முக்தி

இத்தனை பிரிவிலும்
இருந்தது இன்னுமொன்று
மதங்களில் இருந்தே
மதமில்லை தோன்றியது

பேதைமை கொண்டு
பிரிந்தது உலகம்
இனங்களும் மதங்களுமாய்
இயல்புகளை இழந்தே

இப்போது சண்டையில்
மதவாதிகளும் மதமில்லாதவரும்
இனவாதிகளும் ஜாதி வாதிகளும்
செல்லாமல் போனது அன்பு

செகத்துக்கு தேவை அன்பு
செம்மை மொழியிலும் அன்பு
தேர்ந்தே இருப்போம் அன்பாய்
தேடிய பொருளைச் சேர்வோம் அன்பாய்.

வல்வையூரான்

Post Comment

3 கருத்துகள்:

  1. அனைத்தும் அன்பே தான்...

    சிறப்பு கவிதைக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. அருமை.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நன்றி வல்வையூரான்

    பதிலளிநீக்கு
  3. அன்புதான் உலகம் .அருமையான கவிதை கவி வேந்தே!

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.