செவ்வாய், 3 ஜூன், 2014

ஹைக்கூக்கள் 31



மூவர்ணக் கொடியின் நடுவே
கரும் புள்ளி
தமிழின அழிப்பா?


புலத்தில் இருந்து நிலம் வந்தவரை
பிடிக்கவில்லை
போத்தல்கள் வாங்கிவராததால்.



மெழுகின் உள்ளம் உருகியது 
உரத்து எரிந்தது தமிழர்க்காய்
தியாகி முத்துக்குமரன்.



மயிலிறகை சேமிக்கின்றேன் 
புத்தகத்தில்
என் காதல்



நம்பிக்கையை முட்டி தள்ளிவாறே 
நரை வந்தது 
முதிர்கன்னியின் சீதனம்.



பலவந்தமாக பிரித்து மலரவைக்கப்பட்டது
மொட்டாய் பறித்த தாமரை
இலங்கையின் சுதந்திர தினத்தில் தமிழர்கள்



படபடத்து பறக்கின்றது சுதந்திரக்கொடி(???)
சிறிலங்காவில் தமிழருக்கு தெரிகின்றது
வலிகள் சுமந்த கருப்பு.



கற்பனையைப் புணர்ந்தது காலம்
தவழ்ந்த குழந்தைகள்
என் கவிதைகள்.



பரிமாறப்படும் பரிசுகள்
நினைவில் இனிக்கும் 
உன் முத்தம்.



தொங்கிய தூக்கு கயிறு 
கீழ் உயிர்த்தது, 
நீண்ட காலத்தின் பின் நீதி...

வல்வையூரான்.

Post Comment

2 கருத்துகள்:

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.