செவ்வாய், 24 ஜூன், 2014

ஹைக்கூக்கள் 32




உருப்படியாக உத்தரவிட்டாய்
உயிர்ப்பிருக்கிறது உன்னிடமும்
உணர்வுகளாய் நன்றிகள் ...



எங்கும் மூடியிருக்கின்றது பனி
கையில் எடுக்கையில் கரைந்து மறைகின்றது 
எனக்கான உன் அன்பு



முதல் முறையாக பூகம்பம் உணர்ந்தேன்
புரிந்துகொள்ளவே முடியவில்லை
அதிர்ச்சி உன் அன்பு மறுப்பு.



மணக்காத என் வியர்வை போலவே 
எப்பொழுதும் தூயதாக இருக்கின்றது
என் அன்பு.

மருத்துவ குறிப்பு: தூய வியர்வைக்கு மணம் இல்லை. உடலில் உள்ள பாக்டீரியாக்களின் தாக்கத்தாலையே வியர்வை மணக்கின்றது. உடல் எப்பொழுதும் சுத்தமாக இருந்தால் வியர்வை நொடி வர வாய்ப்பே இல்லை.



புத்தகத்தை திறக்கின்றேன் 
மணக்கின்றது
மனதில் இதழ் வரைந்த கவிதைகள்



நிலவொன்று 
பகலில் அழுகின்றது 
வானத்து நிலவைக் கேட்டு



தேடினால் 
தேடப்படுவர்
தேடியவரும் - இலங்கை



தேடினாலும் கிடைக்காதது
வீடுதேடி வருகின்றது 
தேர்தல் இலவசங்கள்



இரவுப் பெண்ணை
துகிலுரிந்தான் சூரியன்
இருண்டது இரவின் கனவுகள்



இரத்தம் சிந்தி 
இறந்துகொண்டிருக்கின்றது எழுதுகோல்
பிறக்கின்றது உயிர்க்கவிதை.



சூடடித்து தூற்றினேன் நெல்லை
பறந்தது உமியும் சாவியும்
பறக்காமல் என் வறுமை



சோதிடத்தால் உயிர்த்திருக்கின்றன 
சிட்டுக்குருவியான புறாக்கள்
காணாமல் போனோரின் உறவுகள்.

வல்வையூரான்

Post Comment

3 கருத்துகள்:

  1. ஆனந்தம், ஆதங்கம், சோகம், ஏக்கம்
    கூட்டுக் கலவைக் ஹைக்கூ!
    அத்தனையும் அருமை!

    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஒவ்வொரு ஹைக்கூம் படிக்க திகட்ட வில்லை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.