ஒற்றை வரியில்
ஒரு சொல்லை வைத்து
செத்த சொல்லெடுத்து
சிங்காரம் பண்ணி
மற்ற வரிகளில்
மளமளவென வைத்து
மனதிலுள்ளதை
மக்கள் விளங்க
மகிழ்வாக மருவில்லாமல்
வைத்து வடித்தால்
வருவது கவியோ?...
செத்த சொல்லெடுத்து
சிங்காரம் பண்ணி
மற்ற வரிகளில்
மளமளவென வைத்து
மனதிலுள்ளதை
மக்கள் விளங்க
மகிழ்வாக மருவில்லாமல்
வைத்து வடித்தால்
வருவது கவியோ?...
வரிகளில்
வ(லி)ழிகளை வைத்து
வண்ணமாய்
படமொன்று வைத்து
எண்ணத்தில் வந்ததை
வண்ணத்தில் வடித்தால்
வருவதும் கவியோ?
எண்ணத்தில் வந்ததை
வண்ணத்தில் வடித்தால்
வருவதும் கவியோ?
எடுத்த பேனையில்
சிந்திய மையின்
சிதறிய எழுத்துக்களில்
சிந்தனையைக் கலந்து
சிதறாமல் கூட்டினால்
வருவது கவியோ?
சிதறிய எழுத்துக்களில்
சிந்தனையைக் கலந்து
சிதறாமல் கூட்டினால்
வருவது கவியோ?
சிந்தனையின் உச்சத்தில்
சிதறிய விந்துக்களை
சீராக அடைகாத்து
உள் வீட்டில் வைத்திருந்து
உரு போட்டு உருப்போட்டு
உத்தம வடிவு வருகையில்
குழந்தையாய் பெற்று
உச்சி முகர்கையில்
கையில் தவழ்வது
கவியோ?
சிதறிய விந்துக்களை
சீராக அடைகாத்து
உள் வீட்டில் வைத்திருந்து
உரு போட்டு உருப்போட்டு
உத்தம வடிவு வருகையில்
குழந்தையாய் பெற்று
உச்சி முகர்கையில்
கையில் தவழ்வது
கவியோ?
ஒரு பெரும் தத்துவ
சாறெடுத்து
ஒரு சில வரிகளின்
உள்ளே வைத்து
உணர்வதை குழைத்து
வெளியே பூசி
உண்மையில் பாதி கலந்து
பொய்யதால் மீதி நிறைத்து
புரிந்தது பாதி
புரியாது பாதியாய்
படித்தவனை
முழி பிதுங்கிட
வரைகின்ற வரிகள்
சேர்ந்தது கவியோ?
ஒரு சில வரிகளின்
உள்ளே வைத்து
உணர்வதை குழைத்து
வெளியே பூசி
உண்மையில் பாதி கலந்து
பொய்யதால் மீதி நிறைத்து
புரிந்தது பாதி
புரியாது பாதியாய்
படித்தவனை
முழி பிதுங்கிட
வரைகின்ற வரிகள்
சேர்ந்தது கவியோ?
பொத்தி வச்சு கற்பனைகள்
முட்டை உடைத்த குஞ்சாய்
முட்டி தள்ளி வெளியே
கட்டிய சில வரிகளுக்குள்
கட்டுப்பட்டும்
கட்டுப்படாமல்
பிரசவத் தாயின்
வலியின் சந்தோசத்தோடு
சில பிழையாய்
சில பிரமாதமாய்
தழுவிய வாசகன்
சிந்தையில் பட்டால்
அது கவியோ?
முட்டை உடைத்த குஞ்சாய்
முட்டி தள்ளி வெளியே
கட்டிய சில வரிகளுக்குள்
கட்டுப்பட்டும்
கட்டுப்படாமல்
பிரசவத் தாயின்
வலியின் சந்தோசத்தோடு
சில பிழையாய்
சில பிரமாதமாய்
தழுவிய வாசகன்
சிந்தையில் பட்டால்
அது கவியோ?
உள்ளத்தில் பூத்த எண்ணங்களை
ஊறவைத்து
ஊற்றெடுத்து வரும் அதன்
சாறெடுத்து
எதுகையும் மோனையும்
சந்தம் சேர்த்து
எடுத்து இனிய தமிழ்
குழைத்து
ஏக்கங்களையும் ஏக
சந்தோசங்களையும்
என் மனதில் இருக்கின்ற
கோபங்களையும்
எட்ட முடியாத என்
விரக்திகளையும்
கண்களில் நீர் சுரக்கும்
கவலைகளையும்
காதலையும் சாதலையும்
சரித்திரத்தையும்
கனமான கருப்பொருளாக்கி
சமைத்து
கட்டிய மாலையாய் தமிழ்
சொல்தொடுத்து
கவின்கொள் சபையில்
விடலே கவி.
ஊறவைத்து
ஊற்றெடுத்து வரும் அதன்
சாறெடுத்து
எதுகையும் மோனையும்
சந்தம் சேர்த்து
எடுத்து இனிய தமிழ்
குழைத்து
ஏக்கங்களையும் ஏக
சந்தோசங்களையும்
என் மனதில் இருக்கின்ற
கோபங்களையும்
எட்ட முடியாத என்
விரக்திகளையும்
கண்களில் நீர் சுரக்கும்
கவலைகளையும்
காதலையும் சாதலையும்
சரித்திரத்தையும்
கனமான கருப்பொருளாக்கி
சமைத்து
கட்டிய மாலையாய் தமிழ்
சொல்தொடுத்து
கவின்கொள் சபையில்
விடலே கவி.
வல்வையூரான்.
Tweet | ||||
அருமை சகோ...
பதிலளிநீக்குஎது கவிதை என்பதை அழகாக சொல்லி விட்டீர்கள் கவிதைகள் தினத்திற்கு பொருத்தமான கவிதை பாராட்டுக்கள்
பதிலளிநீக்குகையில் தவழும் கவி ரொம்பவே பிடித்துப் போயிற்று...
பதிலளிநீக்குஆகா !!கவிதைக்கு ஒரு கவிதை ..ரொம்ப அழகா
பதிலளிநீக்குகவிதை என்றால் எது என்பதுக்கு விளக்கம் சொல்லும் கவி அழகு.
பதிலளிநீக்கு