சனி, 29 மார்ச், 2014

வசதியான அகதி


எங்கள் வயலில்
அறுத்த கதிரில்
எடுத்த அரிசியை

அம்மம்மா நனையவிட்டு
கல்லுரலில் தாளகதியில்
மாத்துலக்கை போட்டு
மாவாக எடுத்து
விறகடுப்பில் வறுத்து
இடியப்பம் அவித்து வைக்க

அம்மா
அம்மியில் தேங்காய் செத்தல்
சரக்குகள் வைத்து
இழுத்தரைத்த சட்னியோடு
இடியப்பத்தை சுவைத்து


அவசர கதியில் நட்ராஜ்
கொம்பாசை எடுத்து
அங்கிங்கேங்கும் இறைந்திருந்த
பேனையும் பென்சிலையும் தேடி
அதற்குள் திணித்து
புத்தகப்பை பையை தேடி
தோளில் போட்டு

கால் நடையாக பாடசாலை
சென்ற நாள்
தந்த இன்ப சுகங்கள் ஏதும்

இங்கு காரில்
டிம்ஹோட்டன் கோப்பியை
உறிஞ்சியபடி
மக்டோனால் சான்விச்சை
கடிக்கையில்
வர மறுக்கின்றதே
ஏன்?

இங்கு நான்
வெளிநாட்டில்
வசதியான அகதி


வல்வையூரான்.


Post Comment

4 கருத்துகள்:

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.