வியாழன், 17 ஏப்ரல், 2014

எங்கள் வயல்கள்



எங்கள் ஊர் வயல்களில்
நாங்கள் விதைப்பதற்று
மறுக்கப்பட்டு
முளைத்துக்கொண்டிருந்தன
நீர் முள்ளிகளும் காஞ்சோண்டிகளும்


காத்திருந்தோம்
காலங்கள் மாறுமென்று
காவலர்கள் காலவதியாக்காப்பட்டனர்
கரும் குரங்குகள்
களத்து மேட்டில் கால்களைப் பதித்தன

வரப்புயர நீர்நிறைத்த
வளமான கதிர் பெருத்த
எம் வயல்களில்
உழுதபோது எழும்பின
உக்கியபடி எலும்புகள்


உருத்தெரியாமல் புதைக்கப்பட்ட
உடலங்களின் எச்சங்களில்
உறவினைக் காணமுடியாது
உள்ளத்து சோகத்தை
உலுக்கி அழுதிட முடியா வேதனை

மீண்டும் எம் வயல்கள்
விதைக்கப்படுமா?
கைதுகளும்
காணமல் போதல்களும்
சுற்றி வளைப்புகளும்
தேடுதல்களும்
எமக்கு தொண்ணூற்று எழுகளை
ஞாபகத்தில் தருகின்றதே

எங்கள் வயல்களில்
நாங்களே
நல்ல நாற்றுக்களை
விதைக்கவே ஆசைப்படுகின்றோம்
எங்கள் வயல்களில் மீண்டும்
எவனோ விதைக்க
ஆரம்பிக்கின்றான்
மீண்டும்
எங்கள் வயல்கள்
எங்களுக்கே எங்களுக்காய் எப்போது?


வல்வையூரான்

Post Comment

1 கருத்து:

  1. மீண்டும்
    எங்கள் வயல்கள்
    எங்களுக்கே எங்களுக்காய் எப்போது//ம்ம் விடைதான் இன்னும் இல்லை!

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.