செவ்வாய், 16 ஜூன், 2015

வல்வையூரானின் “நீங்க எழுதுற பாட்டு” (போட்டி முடிவுகள்.)


மாபெரும் உலகம் தழுவிய பாடலாசிரியர் போட்டி 2015  போட்டி முடிவுகள் 
    கடந்த ஏப்ரல் மாதம் 22 திகதி எனது தளத்தால் அறிவிக்கப்பட்ட இந்த போட்டியானது கடந்த மே மாதம் 20ம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்தது. மொத்தமாக இருபத்தைந்து கவிஞர்களிடமிருந்து இருபத்தேழு பாடல்கள் போட்டியிட்டன. நான்கு இரகசிய நடுவர்கள் பாடல்களுக்கு புள்ளிகளை இட்டனர். அவர்கள் புள்ளிகளை நிரல்படுத்துவதட்கு அவர்கள் புள்ளிகளின் அடிப்படையில் தரப்படுத்து அவர்கள் தந்த முதலாவது அதி கூடிய புள்ளிக்கு என்னால் 30 புள்ளிகளும் தொடர்ந்து 29, 28, 27... என புள்ளிகள் மீள வழங்கப்பட்டது. நடுவர்களுக்கு பாடல் இலக்கம் ஒன்று முதல் இருபத்தேழு வரை இலக்கமிடப்பட்டே அனுப்பப்பட்டன. இதனால் நடுவர்களுக்கு யார் கவிஞர்கள் என்ற விபரம் இதுவரை தெரியாது.


    நான்கு நாடுவர்களும் யார் என நீங்கள் கேட்பது புரிகின்றது.

  • வாண்டு பசங்க படத்தின் இயக்குனரும் இயக்குனர் பாலுமகேந்திராவின் மாணவனுமான இயக்குனர் பாஸ்கி 'T ராஜ்.


  • வாண்டு பசங்க படம் உட்பட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைக்கின்ற இசையமைப்பாளர் RS ரவிப்ரியன்.


  • பல தமிழீழப் பாடகளைப் பாடி தேசியத்தலைவரின் பாராட்டுதல்களை எல்லாம் பெற்ற தமிழீழ பாடகன் நிரோஜன்.





  • பல இலங்கை மெல்லிசை பாடல்களை உருவாகிய இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன்.




  நான் இட்ட புள்ளிகளின் அடிப்படையில் 30x4=120 மொத்த புள்ளிகளுக்கு 111 மொத்த புள்ளிகளை எடுத்த இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த ரியாஸ் குரானா வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டார். இவர் வெற்றி பெற்றதை கடந்த எட்டாம் தேதி பாஸ்கி 'T ராஜ் இயக்கத்தில் RS ரவிப்ரியன் இசையில் வெளிவர இருக்கின்ற "வாண்டு பாசங்க" திரைப்பட பூசை போடும் விழாவில் என்னால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இவர் எழுதிய "நினைவுகள் கால் தடமா "என்ற பாடல் இசையமைப்பாளர் இயக்குனரின் சம்மதத்துடன் வாண்டு பசங்க திரைப்படத்துக்காக பாடலாக்கப்பட்டுள்ளது. பாடலைப் பாடி இருக்கின்றார் பாடகி மின்மினியின் மருமகள் ஹாஷினி. ஆண் குரலுக்கான தேர்வு இடம்பெற்று கொண்டிருக்கின்றது.




மிக விரைவில் வெற்றியாளர்களுக்கு பா.விஜய், சினேகனின் கையொப்பமிட்டவாழ்த்து சான்றிதழ் வழங்கப்படும்

முடிந்தளவு விரைவாக நடுவர்களின் கருத்துக்கள் அடங்கிய ஒலிக்குறிப்பு இங்கு இணைக்கப்படும்.

போட்டியாளர்களே உங்கள் தனித்  தனியான புள்ளிகள் வேண்டுமாயின் என்னை மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.

போட்டியில் சகல வழிகளிலும் உதவிகள், ஒத்தாசைகள் வழங்கிய அனைவர்க்கும் மற்றும்  உடக அனுசரணை வழங்கிய வானொலி நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இந்த போட்டிக்கு முழுமையான ஊடக அனுசரணை வழங்கி இருந்தார்கள்
  • இலங்கை தமிழ் எப். எம்














  • கனடா கீதவாணி வானொலி 


 









  • இலண்டன் உயிரோடைத் தமிழ் (I.L.C) வானொலி

     
     
     





  • முல்லை மண்ணிலிருந்து தமிழருவி இணைய வானொலி



  • லண்டனிலிருந்து தமிழிசை இணைய வானொலி.



வல்வையூரான்.

Post Comment

6 கருத்துகள்:

  1. வெற்றி பெற்றவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள அய்யா,

    இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த ரியாஸ் குரானா வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்ட அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வெற்றி பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  5. சிறந்த பகிர்வு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.