வியாழன், 31 அக்டோபர், 2013

ஹைகூக்கள் 23.பொருமி தவித்தன ஏதிலியாகா ஏதிலிகள்
சாவகாசமாக செருமிக்கொண்டிருக்கிறது
சர்வதேசம்

வியாழன், 17 அக்டோபர், 2013

புரியாத புரிதல்.


புரிதல்கள் இரண்டு
தமக்குள்
சந்தித்துக்கொண்டன

தமக்குள் புரிந்துணர்வில்லாமலே
பேசிக்கொள்ள ஆரம்பித்ததன
புரிதல்கள்;
புரிதல் பற்றியே

செவ்வாய், 1 அக்டோபர், 2013

காகித எழுதி.


தேர்ந்த கவி ஒருவனின் 
கைகளில் சிக்கிக்கொண்ட
காகித எழுதி
கன வேகமாக நிரப்பிக்கொண்டிருந்தது
காகிதத்தின் வெற்றிடங்களை
கனமான பொருளோடு...