சனி, 18 மே, 2013

ஈழத்தை அமைக்கும் நம்பு.

 

முள்ளி வாய்க்களில் இருந்து நாங்கள்
முனகளுக்கிடையில் அள்ளி எடுத்தோம்  பிணங்கள்
முழுதாய் ஆனதின்று ஆண்டு நான்கு
முன்னேற்றமிழந்து போனது இன்றுபோல் உள்ளதுகாலங்காலமாய் தமிழனை எதிர்த்த
கண்ணாடிக்கர னொருவன்
கலந்தே இருந்த இன்னொருவன்
கடிதென விலகி கரைமாறி நின்றவன்.


காட்டி கொடுத்தே  கலைத்தமிழை
கயவர் அழிக்க  கருத்தோடு உதவினர்
கருக் குழந்தை முதல் கட்டிளம் காளையர்
கன்னியர்  கனவான்கள் வயோதிபர் பெண்கள்

வயது வேறுபாடின்றி வகை தொகையுமின்றி
வளைத்து வைத்து கொண் றோழித்தனர்
வழக்க மில்லா குண்டுகள் கொண்டே
வஞ்சக மான உதவிகள் கொண்டே


போர் விதிமுறை எல்லாம்
போக்கியே வீணர் வென்றனர் கொண்டாடினர்
போதி மரத்தவன் நாமம் புகன்றே
போதித்த தருமத்தை புத்தியில் கொள்ளாதோர்

இன மானம் உள்ளோன் தமிழன்
இருன்டிடா விரம்  கொண்டோன் தமிழன்
இருந்திட்ட அரசுகளடக்கி ஆண்டவன் தமிழன்
இலங்கையின் மூத்த குடியும் தமிழன்


வென்றிட்ட வீர பரம்பரையை சிங்களம்
வெல்லவே உலகெலாம் உதவி வாங்கி
வேதனைப்படுத்தி மக்களைக் கொன் றொழித்து
வெடி கொளுத்தி கொண்டாடுதாம் வெற்றிநாள்(???!!!)

இத்தனை உயிர்களின் ஆத்மா ஒருநாள்
இயங்கியே வந்து இயக்கம் அமைத்து
இழந்ததை எல்லாம் இயல்பாய் வென்று
இனிய ஈழத்தை அமைக்கும் நம்பு.

வல்வையூரான்.

Post Comment

5 கருத்துகள்:

 1. வல்வைக்குமரன்4:33 முற்பகல், மே 18, 2013

  சிறப்பான பாடல்வரிகள்.வரிகளுக்கேற்ற புகைப்படங்கள்
  இரண்டும் இணைந்து இன்றைய
  நாளுக்கு மிகவும் பொருத்தமாய்
  அமைந்துள்ளன.வாழ்த்துக்கள்  பதிலளிநீக்கு
 2. வழி காட்டியவர்களோடு வலி மாறாமல் பின் தொடர்வோம்.வீரவணக்கம் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் அக்கா. நீண்ட நாளின் பின் வரவு.

   நீக்கு
  2. வலிகளின் நினைவு கவிதை .நன்றி

   நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.