ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

என் இருப்பிடம்


மௌனத்தின் கதவுகள் தட்டப்படுகையில்
மெல்ல எட்டிப்பார்க்கின்றது உன் வெட்கம்
மல்லிகைப் பூவின் வாசம்போலவே
மெல்ல தவழ்கின்றது உன் புன்னகை


கொஞ்சம் அதிகமாக நிறைய ஆழமாக
உடுருவி செல்கின்றது உன் பார்வை
கண்ணாடியில் விழுந்த மழைத்துளிபோல்
வளைந்து நெளிகின்றது உன் கன்ன கூந்தல்

மெதுவாக ஆனால் மிக நிதானமாக இருக்கின்றது
எனக்குள்ளான உன் வரவு
தடதடத்த வேகத்தில் வந்த புகையிரதம்
நிலையத்தினுள் செல்கையில் காட்டும் நிதானம்

இத்தனை நிதானத்தில் ஆரம்பிக்கின்றது
உன் மீதான என் இதயத்தின் காதல்
ஆவலாகத்தான் இருக்கின்றது அறிந்துகொள்ள
என் இருப்பிடம் எப்படி உன் இதயத்தில் என்று?

வல்வையூரான்

ஒலி வடிவில் கவிதையினைக் கேட்க இங்கே சொடுக்கவும்

Post Comment

2 கருத்துகள்:

 1. வணக்கம்
  அண்ணா.

  காதல் மழைக் கவிதையில் நனைந்து விட்டேன்
  பாடிய வரிகள் தித்திக்கிறது நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. காதல் இருப்பிடம் இனிமை. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.