ஞாயிறு, 27 மே, 2012

ஞாயிறு, 20 மே, 2012

மௌனம் பேசியது.மெதுவாக கண்களைத் திறக்க முயற்சி செய்தாள் அமுதா. தலை விண் விண் என வலித்தது. காலில் வேறு பாரமாக உணர்ந்தாள். 'அட அது .... அம்மாவா?...' நீராவி படிந்த கண்ணாடியூடு பார்ப்பது போல் பார்வை தெளிவற்றிருந்தது.

இரண்டு மூன்று முறை கண்களை மூடித் திறந்தாள் அமுதா. இப்போது பார்வை சற்று தெளிவாக இருந்தது. வலியும் அதிகமாக தெரிந்தது.

" அம்... மா... "

வேதனையில் முனகினாள் அமுதா.

" பிள்ள நான் நிக்கிறன் நீ படு... "

ஆறுதலாக தடவினாள் லலிதா, அமுதாவின் தாய். மெதுவாக மீண்டும் கண்களை மூடினாள் அமுதா. அவள் நினைவுகள் எங்கோ பறந்தது. வலி தெரியாமல் இருக்க அந்த நினைவுகளில் மனதை வலிந்து புகுத்தினாள் அமுதா.

வியாழன், 17 மே, 2012

நம் கொடி அங்கே எப்போது பறக்கும்?


கொத்து கொத்தாய் தமிழர்கள்
கொன்று குவிக்கப்பட்டது இந்த மே 18
கொன்று குவித்தவன் இன்றும்
கோலோசுகின்றான் குதூகலமாய்

கொல்லப்பட்ட இனம் இன்றும்
கொண்ட வழி மறந்து மண்டியிட்டிருக்குது.