வெள்ளி, 20 ஏப்ரல், 2012

வல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாடல்.

வல்வை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகோற்சவம் 22.04.2012 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 06.05.2012 அன்று தீர்த்தோற்சவம் இடம்பெறும். அந்த தாயை துதிக்கும் முகமான பாடல் இது.
வல்வெட்டித் துறை ஓரம் - அன்னை உந்தன் சந்நிதானம்
சொல்லு நற் றழகாளே - என்னை தந்தேன் நமஸ்காரம்
கோடியாக் கரை விட்டே - கோல முத்தே வல்வை வந்தாய்
கோடி முறை துதிக்கின்றோம் - கொலுவிலுள்ள வாழ்வைத் தாயே



ஆதி சக்தி ஆனவளே - அகில மெல்லாம் ஆள்பவளே
ஓதி தினம் உருவேற்றி - பாவி மனம் உனை நாடும்
நாதி அற்றோ ருக்கெல்லாம் - நானு ண்டாகி நிற்பவளே
பாதி மதி அணிந்தானின் - பக்க துணையே வல்வைத்தாயே

கால மெல்லாம் கடந்தவளே - கருணை உள்ளம் கொண்டவளே
ஓலமிட்டே உனை நாட - ஓடி அருள் புரிபவளே
ஆழமான ஆழி கடந்து - அன்னை வல்வை வந்தவளே
கோல வண்ணன் தன்கையளே - கோடி முத்தே வல்வைத்தாயே

சீறும் நல்ல பாம்புந்தன் - சிகைக்கு நல்லகுடை பிடிக்கும்
சீரும் சிறப்பும் கொண்டவளே - சித்திரமே சிறு பெண்ணே
ஆறாத் துன்பம் அழிபவளே - ஆரும ற்றோர்க் கருள்பவளே
பேரும் உனக்கு பெரிதுதானே - எனை பெற்றவளே வல்வைத்தாயே

வண்ணக் கோபுரம் கொண்டாய் - வானுயரத் தான் நின்றாய்
தண்ணொளிப் பேரும் சுடரே - தாயாளே முத்து மாரி
மன்னர் எலாம் பணிகின்றார் - மாதுளம் பூ நிறத்தாளே
முன்னம் நீ நின்றாளே - முத்தே எல்லாம் சொர்க்கம்தானே.

வல்வையூரான்

Post Comment

4 கருத்துகள்:

  1. /////கோடியாக் கரை விட்டே - கோல முத்தே வல்வை வந்தாய்/////

    கோயில் மண்டபத்தில் இருக்கும் அந்தக் கதைச்சித்திரத்தைப் பார்ப்பதற்காகவே சிறுவயதில் விரும்பிச் செல்வேன்...

    பதிலளிநீக்கு
  2. பக்திரசம் சொட்டச் சொட்ட முத்துமாரியை விழி திருப்ப வைத்து விட்டீர்கள் முகுந்தண்ணா..

    பதிலளிநீக்கு
  3. அழகான பாடல்... அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...

    சீறும் நல்ல பாம்புந்தன் - சிகைக்கு நல்லகுடை பிடிக்கும்
    சீரும் சிறப்பும் கொண்டவளே - சித்திரமே சிறு பெண்ணே...

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.