புதன், 6 மார்ச், 2013

ஹைக்கூக்கள் 9
இலங்கையில் தமிழர்களுமேற்றினர் சுதந்திரதினக் கொடி
அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது
கொடி ஏற்றாதிருக்கும் சுதந்திரம் கூட.கடைகளில் நீட்டும் போதெல்லாம் நிறைவாயிருந்தது
மீள நிறைக்கையில் நிலைகுலைத்தது
கடனட்டை


தீயாக பரவவேண்டும்
உலகமெங்கும்
அமை'தீ'


நீ ஓடிக்கொண்டிருப்பதால்
கடந்து போகிறது
எல்லாம் - காலம்.


அதர்மமழித்து தர்மம்காக்க
ஆதி முத்து அமர்ந்தாள் தேர்
மாத்தளை பஞ்சரதபவனி.


மண் காக்க வந்தவள்
மலை மாத்தளையிலமர்ந்தவள்
மனமே காண் தேர்.


Post Comment

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றிகள் பிரேம். தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு

 2. வணக்கம்!

  என்றன் கவிகளை ஏத்திக் கருத்தளித்தீா்!
  உன்றன் தமிழால் உவந்து!

  முகுந்தன் படைத்த துளிப்பாக்கள்
  முல்லைக் காடாய் மணந்ததுவே!
  தகுந்த படங்கள்! என்மனத்துள்
  தங்கும் படங்கள்! வாழ்த்துகிறேன்!
  உகந்த வண்ணம் பதிவேற்றி
  ஒளிரும் வண்ணம் புகழ்பெறுக!
  மிகுந்த அன்பால் விருத்தத்தில்
  விருந்தாய்க் கருத்தை விளைத்தனனே!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா் - கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம்
   கவிஞன் என்ற பட்டத்தை
   கலையாய் சூடிக் கொண்டவரே
   உம் தமிழாடல் முன்
   எம் தமிழாடல் சபையேறுமோ
   ஆசையால் பூனை ஒன்று
   அமுதக் கடலை நக்கியதுபோல்
   ஓசையாய் நானும் இங்கே
   ஒருசில வரிகள் சொல்லுகின்றேன்
   விருத்தத்தின் வழி வினயமாய்
   விரிவாய் கருத்து சொன்னவரே
   சித்தம் நிறைத்தேன் உம்கருத்தை
   சிரம்தாழ்த்தி சொன்னேன் நன்றிகளே.

   நீக்கு
 3. பதில்கள்
  1. நன்றிகள் கும்மாச்சி. முதல்வருகை. தொடர்ந்து வாருங்கள்.

   நீக்கு
 4. அருமையான குறுங்கவிதைகள் சகோதரரே..

  காலம் பற்றியது...

  நொடிகள் ஓடுகின்றன
  உன்னடிகளை நீளப்படுத்து
  இல்லையேல்
  பருவம் கலைந்துபோகும்...

  என்பது போல..
  மிக அழகாக இருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் அண்ணா. எல்லாம் உங்கள் போன்றோரின் சகவாசம் தான்

   நீக்கு
 5. அருமையான குறுங்கவிதைத் துளிகள்...இரசித்தேன்..

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.