செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

ஹைக்கூக்கள் 28.




கைதட்டல்களுக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கின்றாய்
மயங்கிக் கொண்டிருக்கிறது உன் வீடு
பசியில்



எப்போதுமே தேடுகின்றேன் நிலவை
குழந்தையாய் சோறு உண்ண
குமரனாய் உன்னைப் பார்க்க...



முத்தங்களுக்காக காத்திருந்தன இமைகள்
ஏமாற்றம் 
தமக்குள் இறுக்கமாக முத்தமிட்டன - தூக்கம்.



மண்ணை உழுது பிரட்டின மாடுகள்
பண்பட்டது மண் ஐந்தறிவால்
பண்படவில்லை ஆறறிவு.



நட்சத்திரங்கள் வழிகாட்டின தொழுவம்
தொழுதவர் கொண்டாடினர் பண்டிகை
உங்களுக்கும் நட்சத்திரமாய் மின்னும் பரிசுகள்.



அலைக்கரத்தாளின் மலைக்கரத்தணைப்பு
மூழ்கினர் ஆயிரம்
இன்னமும் துயரத்தில்..



ஆசையாக சுவைத்த அல்வா
கசக்கின்றது வாயில்
உன் வாய் சுவைக்காததால்.



சுடுகின்றாய் இதயத்தில் 
பிறக்கின்றான் 
புதிய கவிஞன்.



வேகமாக அபிவிருத்தியடைகின்றது நாடு
கிராமமெங்கும் புதிதாக திறக்கப்படுகிறது
நவீன பார்கள்



தூவுகின்றேன் உண(ர்)வுகளை
உண்டு தீர்க்கின்றன
கவிப்புறாக்கள்

வல்வையூரான்.

Post Comment

7 கருத்துகள்:

  1. வணக்கம் அண்ணா...

    சிறப்பான ஹைக்கூக்கள்.

    பிடித்தவை....

    மண்ணை உழுது பிரட்டின மாடுகள்
    பண்பட்டது மண் ஐந்தறிவால்
    பண்படவில்லை ஆறறிவு.

    மற்றும்

    சுடுகின்றாய் இதயத்தில்
    பிறக்கின்றான்
    புதிய கவிஞன்... பிடித்தது.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பான கைக்கூ வரிகளுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான வரிகள் சகோ !
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. அனைத்தும் அருமை... முக்கியமாக அல்வா, ஆறறிவு, புதிய கவிஞன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. எல்லா ஹைகூக்களுமே நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள் !!!

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.