புதன், 21 மே, 2014

ஹைக்கூக்கள் 30
கலகலத்து சிரிக்கவில்லை பிச்சைப்பாத்திரம்
குரலெடுத்து அழுகின்றன
குழந்தைகள் பசியில்.ஆனந்தமாக தூங்குகின்றன
பனித்துளிகள்
சூரியன் வருவது தெரியவில்லை.காலத்தை தின்கின்றது 
கடிகாரம்
உன் நினைவுகளாய்.நிலம் விட்டு புலம் போனன குழந்தைகள் 
தனிமையில் எனக்கு பிடித்த சொர்க்கம்
என் கயிற்றுக்கட்டில்.சூரியன் குறியாக உயரப்பறக்கின்றேன்
பார்த்து சிரிக்கின்றன
நிலத்தின் சந்தோசங்கள்.புரட்டினேன் புத்தகங்கள் பல
புரியவே இல்லை
பூவையின் மனது.


தமிழ் இன்னமும்
வாழ்ந்துகொண்டு இருக்கின்றது
சாவீட்டு ஒப்பாரிகளில்.வெடித்து உடைகின்றது
நிலநடுக்கம்
உன் முத்தமில்லா என் உதடுகள்.இடைவிடாமல் புகைந்தன 
தொழில்ச்சாலையில் இயந்திரங்கள்
புலம்பெயர் ஈழத்து மனங்கள்.திருட்டுக்கள் நடக்கின்றன 
இரவின் மெல்லிய வெளிச்சத்தில்
காணாமல்போனது கட்டியிருந்த வெட்கச்சேலை.

வல்வையூரான்.

Post Comment

2 கருத்துகள்:

  1. அழகு, நயம், கருத்து, ஏக்கம், அனைத்தும் சிறப்பு..

    பதிலளிநீக்கு
  2. அருமைக்ஹைக்கூ அதிலும் கயிற்றுக்கட்டில் மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.