புதன், 1 ஏப்ரல், 2015

ஹைக்கூக்கள் 34

தொலைத்த கேள்விகளுக்கான தேடல் 
கையிலிருக்கின்றன பதில்கள் 
வாழ்க்கை 
மீண்டும் விரைவில் தேர்தல் வரட்டும் 
போஸ்டர் ஒட்டி பிழைக்கலாம் 
ஏழை கூலி தொழிலாளி உன் அன்பும்
சுகமாய் இனி(ணை)க்கின்றது 
நீ என் தம்பி.. இன்றும் கடின உழைப்பு, 
ஓய்வு நாளாம் மே தினம்
முதலாளிகளுக்கு கால தேவனின் 
பருவ கண்ணாடிகள் 
பெண்மைப் பூக்கள் கவிழ்ந்த மதுக்கோப்பையில்
வழிந்து சொட்டிக்கொண்டிருக்கின்றது 
உன் நினைவுகள் குப்பை கிண்டுவது
கோழியின் குணம் 
கிளறப்படுகின்றனர் தமிழர் பெருவெடிப்பினால் பிரசவம்
தவழும் குழந்தைகள் 
கவிதைகள் முட்கம்பி சிறைகளில் சமாதானம்
உலகெங்கும் திறப்படுகின்றன 
அகதி முகாம்கள் அடி பட்டாலும் 
திருந்தி கொள்ள விரும்பவில்லை 
உன் மீதான காதல் 

வல்வையூரான்.

Post Comment

3 கருத்துகள்:


 1. படங்களும் பாவரிகளும் நன்று
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  அண்ணா

  ஒவ்வொரு வார்த்தைகளும் நன்றாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. அருமையான ஹைக்கூக்கள்! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.