சனி, 11 ஆகஸ்ட், 2012

அன்பின் நண்பனே !!!அதிகமாய் நேசித்தேன் உன்னை - ஆனாலும்அசிங்கமாய் சோதித்தாய் என்னை.

ஆருமில்லை எனக்கென்றாய்- 
உனக்கு 
ஆன மட்டும் நானிருப்பேன் என்றேன்!!
ஊருமில்லை உற்றமில்லை எனக்கு என்றாய்
உலகில் அஞ்சாதே நானுண்டு உனக்கேன்றேன்பாரதியின் கவிதை தான் எனக்கு உன்னை பார்கையில்
பலமுறை நினைவுக்கு வந்தது 'கண்ணன் என் சேவகன்..'


பாசம் இருக்கிறதே அது பாவம்  செய்தது
பாசம் கொடுக்க மட்டுமே தெரிகிறது  மறுக்க தெரிவதில்லை

பாசப்பும் பாசம் போல தானிருக்கும்
படிப்பினை பலமுறை பெற்றும் உறைக்குதில்லை.

தேசங்கள் பல கடந்திருந்தும் பாசத்தால் 
தெரிந்த சிலரே இணைந்திருந்தனர்
இணைந்தவர் எல்லாம் உண்மை பாசம்
இதுவென்று இயம்பினர் ஆனால்...

உதைக்கின்ற போது வலிக்கிறது 
உயிரும் நிலை குலைந்து போகிறது...

பதைக்கின்றது இதயம் உன் நிலைகண்டு - ஆனால்
சிதைக்கின்றது உந்தன் செய்கைகள் அதை.விதைக்கின்ற விதைகள் எல்லாம் - பாரில்
விளைந்து பலன் தருவதில்லை.

முளைகின்ற கதிர்கள் எல்லாம் கூட 
முற்றி அரிசி ஆவதில்லை.

உடைந்தது என் நெஞ்சு மட்டுமாகவே இருக்கட்டும் 
உடைத்திடதே பலரின் நெஞ்சை.

மனங்களை புரிந்து வாழ் 
மாண்புகழ் சேர வாழ். 


 வல்வையூரான்
Post Comment

4 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றிகள் நண்பரே. தொடர்ந்து வந்து செல்லுங்கள்.

   நீக்கு
 2. வாழ்த்துக்கள் வார்த்தைகள் வசப்படுகின்றன ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதரவுக்கு நன்றி நண்பரே. தொடர்ந்தும் வந்து செல்லுங்கள்.

   நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.