ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

கனடா பயணம்.


கனடா எண்டு கப்பல்ல கனவுகளோட வந்தம்,
கப்பல் வந்து சேர்ந்த கடற்கரை விட்டோரியா.
காலம் பார்த்தால் அதுஆ.. கஸ்டு பதின்மூன்று.
கால் வச்சது இரவு, அங்க கன பதிவுகள் பத்திரங்கள்.

 கனடாவின் காலை கடும் குளிராதான் இருந்தது.
கன நேரம் ஆனபின்னும் இரவில் சூரியன் நின்றது.
காலை விடிந்தது எந்தன் கனவு பலித்தது என்றால், இல்லை
காலை விடிந்ததும் எந்தன் கையில் விலங்கு விழுந்தது. 
நண்பர்கள் பிரிந்தனர். நானும் தனித்து நின்றனன்.
நண்பகலில் நால்வேறு பிரிவுகளாய் வந்தோருடன் நானும் குளித்து,
நல்ல சாப்பாடுகளை(!!!) சாப்பிட்டு, நன்றாய் சயனித்து, மாலை
நாலு மணிக்கு மேல வன்குவாருக்கு வந்தோம் வேறு கப்பல. 
வந்குவாருக்கு வந்த எங்களை வரவேற்று இருத்தினர், பின்னர்
வாசலால உள் எடுத்து, வழங்கினர் பழைய செவ்வாடை, முன்னர்
வந்திருந்தோர் எல்லாம் வழக்கமும் பழக்கமும் இல்லாமல்
வாய்த்த மேனி காட்டி குளித்தனர். வெட்கத்தால் குனிந்தனர்.


 நீலப் பட்டி என்றும், பச்சை பட்டி என்றும் நிலைகள் பிரித்தனர்
நிலையான கதவங்களின் பின்னால் நிறுத்தினர் எம்மை.
நீள்தடி கொண்டு வருத்தினர் இல்லை, எனினும் வருந்தினோம்.
நினைவுகள் மட்டும் தாயகம் சுழன்றது. நிம்மதி இழந்தோம்.
 
இருந்தது இரண்டரை மாதம் நான் அங்கு, இன்னும் இருக்கினமாம்...
இரண்டாண்டு கழியவும், இருப்பவருக்கு இறைவன் துணை இருக்கட்டும்.
இதுதான் இப்ப செய்ய முடியும் எங்களால, இதுக்கு மேல என்ன செய்ய???
இங்கு நாங்களும் இருக்கிறோம், இக பர சுகங்கள் இழந்து. 
வேலை வேலை என்டு போறம் தான், ஆனாலும் வேதனைகள் தான் மிச்சம்.
வேகவேகமாக பஸ் மாறி வேறு வேலைகள் செய்தாலும்,
வெறும் கைதான் மிச்சம் மதக்கடைசில. ‘எண்ட மனிசன்
வெளி நாட்டில நிக்குறார்என்று மார் மட்டும் தட்டலாம் மனிசிமார். 
ரெண்டாண்டு இப்படி போச்சு. இனிவரும் ஆண்டு.......?
இருக்குது பெரிய நம்பிக்கை. ம்ம்... நம்பிக்கைதானாம் வாழ்க்கை
இனிக்கின்ற வாழ்வு இருக்கும் எங்களுக்கும்.... இருப்பம்....
இறுதி வரை காத்திருப்பம், இறைவன்(???) கண் திறப்பான்... ம்ம்ம்..... 


                                                         வல்வையூரான்.


Post Comment

10 கருத்துகள்:

 1. வணக்கம் அண்ணா,
  இன்பமும், துன்பமும் இணைந்தது தானே வாழ்க்கை.
  காத்திருங்கள் காலம் என்றோ ஒரு நாள் கனியும் என்ற நம்பிக்கையில்.
  மனதைப் பிழியும் பயண அனுபவத்தை எம்மவர்களினை அனுப்பி விட்டு ஊரில் உள்ளோர் உணர்வது குறைவு தானே..
  என்றோ ஓர் நாள் ஒளி பிறக்கும் எனும் நம்பிக்கையுடன் பயணிப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் நிருபன். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

   நீக்கு
 2. வல்வையூரான்,
  தொடருங்கள் வலிகளை சுமந்த சமூகமாக தமிழ் சமூகம் வரலாற்றில் நிலைபெறக்கூடாது
  மாற்ற உழையுங்கள்.அது எழுத்துக்களாலும் முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது உண்மை. கண்டிப்பாக அந்த பணிக்கு என்னாலான பங்களிப்பு இருக்கும். உங்களிம் அதரவுக்கு நன்றிகள். தொடர்ந்தும் ஆதரவை எதிர் பார்க்கின்றேன்.

   நீக்கு
 3. ithuthaan eel thamilanin thalai vithiyo enru enni alaththonrukirathu...manam thalaraatheerkal.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே அழுவதற்கில்லை தமிழன். அடங்காமல் எழுவதற்கே. என் வழியாக பலர் இதை வாசிக்கும் போது தங்கள் சுமை இறங்கியதாக உணர முடியும் என நினைக்கிறான்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. நன்றி நண்பரே தொடர்ந்து வருகை தாருங்கள்.

   நீக்கு
 5. இந்த கடல் பயணங்களை பற்றி எழுதோணும்

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.