
சிற்றலை ஓடிவர
சிறுநண்டு குழிபுக
சிதறுண்டு கிடந்த சோகி
சிறுகை கொண்டு சேர்த்தேன்.
பொறுக்கிய சோகி சேர்த்து
பொதுவில வைத்து விட்டு

பொரி முறுக்கை விற்று வந்தேன்.
கடற்கரை ஓரத்தில்

கனவான்களிடம் தான்
காசாக்கினேன் என் பொரி முறுக்கை.
சிக்கடித்த தலையுமாய்
சீரற்ற உடையுமாய்
சில்லறைக்கு முறுக்குவிற்கும்
சிறுபையன் தான் நான்.
இருக்கின்ற முறுக்கு விற்று
இனிதாய் திரும்பும் வேளை
இருக்குது சில்லறை
இவளவும் உனக்கென்றான்.

எனக்கேன்றதாலோ என்னவோ
ஏழைமனம் விரும்பியது
எதையும் பார்க்காது
ஏங்கியபடி போனதவன்பின்னே.
போனவன் சேர்ந்தான்
பொதுவிடுதி ஒன்றினறை

பொருந்திய வாசலைத்தாள் செய்தான்.
பூடியவன் மீண்டு என்னில்
பூட்டியிருந்தவென் ஆடையகற்றி
புதுமையாய் எதோ செய்தான்
புதுவுடல் களைக்க வைத்தான்.
ஒருக்களித்து இருந்த நான்
ஓரமாயிருந்த தொலைக்காட்சியில் பார்த்தேன்
ஓடியது ஒரு செய்தி இங்கு
ஓங்கிவளர்ந்துவிட்டதாம் சிறுவர் துஸ்பிரயோகம்.
வல்வையூரான்.
Tweet | ||||
அழகிய தமிழ் நடையில் ஒரு சமூகசாட்டை சுழல்கிறது.
பதிலளிநீக்குவார்த்தை அடிகளால் திருந்துவார்களா .......................????
நல்ல கவிதை.வாழ்த்துக்கள் நண்பனே.
திருந்துவார்களா இல்லையா என்பதை விட ஒரு விழிப்புணர்வு வரும் என நினைக்கிறேன். இதனால் திருத்தப்படலாம் இவர்கள் மற்றவர்களால். நன்றி நண்பனே தொடர்ந்து வாருங்கள்.
நீக்குமிகவும் வேதனை தரக்கூடிய விடயமான சிறுவர் துஸ்பிரயோகங்களை மிக அழகாகவும் தெளிவாகவும் கவி வரிகளாக வடித்திருக்கிறீங்க அண்ணா உங்களுடைய எழுத்து வடிவம் இதில் இன்னும் மெருகேற்றமடைந்துள்ளது வாழ்த்துக்கள் அண்ணா..
பதிலளிநீக்குநன்றிகள் சகோதரி தொடர்ந்தும் வருகை தாருங்கள்.
நீக்குஅருமை மிக அருமை
பதிலளிநீக்குவார்த்தைக் கோர்வை பொருத்தமாய் அமைந்திருக்கிறது
நன்றி சிட்டு குருவி வருகைக்கும் கருத்திடலுக்கும். தொடர்ந்து வாருங்கள்.
நீக்கு'புதுமையாய் ஏதோ செய்தான் புதுவுடல் களைக்க வைத்தான்'என்ன செய்வது?நீங்கள் எடுத்த ஆயுதம் எழுத்து எழுதுங்கள் நிச்சஜம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் .தமிழில் பாண்டித்தியம் இருக்கிறது அதேபோல தட்டெழுத்துக்களிலும் கொஞ்சம் கவனம் செலுத்தவும் [முறுக்கு,பொரி]
பதிலளிநீக்குநன்றி நண்பரே உங்கள் திருத்தங்களுக்கும் கருத்திடலுக்கும். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
நீக்குஅடுக்கடுக்கான தமிழின் எளிய நடையில் அற்புதமாக சமூக விழிப்புணர்வு ஒன்றை பாதிக்கப்பட்டவன் சார்பில் கவியாக வடித்திருக்கின்றீர்கள்.மிக்க அருமை அண்ணா..
பதிலளிநீக்கு//சிக்கடித்த தலையுமாய்
சீரற்ற உடையுமாய்
சில்லறைக்கு முறுக்குவிற்கும்
சிறுபையன் தான் நான்.//
அழகான வரிகள்...அண்ணா.
வாழ்த்துக்கள்..!!!
நன்றிகள் அரசி வரவுக்கும் கருத்துப்பகிர்வுக்கும். தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.
நீக்குஆழமான வரிகள். அதில் உள்ள அர்த்தங்கள் அடி மனதை தொடுகின்றன. எப்படிப்பட்ட கீழ்த்தரமக்கள் பணத்தை காட்டி மோசம் செய்யும் சிறுவர்களை விடக்கூடாது. இப்படிப்பட்டவர்கள் நல்ல சாவே வராது. காமம் கண்ணை மறைத்தால் மனிதனுக்கும் நாயுக்கும் வித்தியாசம் இல்லை. சிறு குழந்தைகள் ஏதோ வியாபாரம் செய்து அவர்களின் பிழைப்பில் இருக்கும் போது இப்படி அழிக்கிறார்களே. எழுதிய விதமும் சொல்லிய விதமும் அருமை தம்பி...
பதிலளிநீக்கு