புதன், 17 அக்டோபர், 2012

தித்திக்கும் வெளிநாடு



காலையில் எழுந்தேன் நேரம்
காட்டியது  ஆறு பதினைந்து
காலைக் கருமங்க ளாற்றினேன்
கன கதி வேகமாக.

குளிரும் தண்ணீர் மாற்றி
கூதலைப் போக்க சுடுநீராக்கி
குளித்தேன் குறுகிய நேரத்தில்
கும்பிட்டேன் சாமியை குறியுமிட்டேன்.


ஆகியது நேரமேழு அலுப்புதான்
ஆனாலும் அவசரமாய் ஓடி
ஆடிவந்து நின்ற பேரூந்தேறி
ஆசையாய் குட்டி தூக்கம் அங்கேயும் போட்டேன்.

பதினைந்து நிமிடத்தில் பஸ் அங்கு நிற்கையில்
பாய்ந்து இறங்கி படிகளும் ஓடி
பறக்க தயாராய் நின்ற இரயில் ஏறி
பாதுகாப்பாய் ஓர் இருக்கை இருந்தேன்.

இருக்குது இன்னும் நாற்பத்தைந்து நிமிடம்
இனிதாய் இன்னுமொரு குட்டிதூக்கம்
இப்படி எண்ணி நான் இமைமூட நினைக்கையிலே
இருக்குமிடமருகே வந்தாள் இருமியபடி வெள்ளைப்பாட்டி.

வெள்ளைப் பாட்டி வந்ததாலே
வெருட்டப் பட்டது என் தூக்கம்
வேகமாய் எழுந்தேன் விலகித்தான் நின்றேன்
வெள்ளைப் பாட்டி உரைத்தாள் 'தாங்யூ மை டியர் சண்'.

ஆச்சுது நின்ற நிலை அடைந்த இரயிலினுள்ளே
அசையவும் இடமில்லை ஆயாசம் மிகுந்தவனாகி,
அலுப்போடு நின்றிருந்த இரயிலில் இருந்திறங்கி
அதிரடியாய் படியேறி அடைந்தேன் அடுத்த பஸ்.

இப்படித்தான் தினமும் நாங்கள் வேலைக்கு
இடிபட்டு  நெரிபட்டு இற்றுப்போய் நொந்துபோய்
இதமற்ற குளிரில இங்கு வந்து
ஈரேழு மணிநேரம் வேலை செய்து

சருகாகி மக்கி சாணியாய்  மிதிபட்டு
சாயந்தரதுக்கு மேல சின்னதா சாப்பிட்டு
சந்தோசம் எண்டத சத்தியமா மறந்து
சலிப்போடும் அலுப்போடும் வேலைய முடிச்சு,


அடுத்த நாள் ஆரம்பிக்க அரைமணி என்றிருக்க
அதே ஓட்டமாய் பஸ்சேறி  இரயிலேறி
அங்கே கொஞ்சத் தூக்கம் இங்கே கொஞ்சத் தூக்கம்
அப்படியே வீடு சேர ஆயிடும் மணி அதிகாலை ரெண்டு

திருப்பி ஒரு நாலு மணி நேர நித்திரை
திக்கு வெளிக்க முதல் மீண்டும் பழையவோட்டம்
திங்கள் முதல் ஞாயிறு வரை திருப்பித் திருப்பி இதுதான்
தித்திக்கும் வெளிநாடு - திகைக்குது தூக்கம், வாரன்....


 வல்வையூரான்.

Post Comment

23 கருத்துகள்:

  1. எனக்கென்னவோ நீங்கள் பயணக்களையுடன் முடித்துவிட்ட மாதிரி இருக்கு,இன்னும் நிறைய துன்பங்கள் இருக்கு அவற்றையும் போட்டு தாக்குங்க பாஸ்
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரவுக்கும் சூடான கருத்துக்கும் நன்றி நண்பா. நித்திரை வருது பிறகு வாரன்....

      நீக்கு
  2. Hye ! Pics are Toronto, Nice Poem. Life in Abroad is Hectic, but we should make it smooth cool as much as possible.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே. நீங்கள் சொன்னது சரி படங்களில் வருபவை TTC வாகனங்களே. நானுமிருப்பதும் இந்த நகராதலால் அவற்றை உபயோகித்தேன். முதல் முறையாக இங்கு கருத்திட்டீர்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள். தொடர்ந்தும் ஆதரவு தாருங்கள்.

      நீக்கு
  3. அழகாக சொல்லியிருக்கிறீங்கள்
    கொஞ்ச காலம் நாங்களும் இதே அனுபவவத்துடன் இருந்தோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த அனுபவம் பலருக்கு இருக்கிறது நண்பரே. நான் வெறும் கருவி. அவளவுதான்.

      நீக்கு
  4. Good that you have shared the life routine in a nut shell.

    Still people trying to flee illegally to abroad and getting stuck somewhere, as I have seen the hardships and pains of being in detention centers of the enroutes,special request to all our peers, please go for safe migration ( if needed), even by tolerating the hardships if you arrive at your desired location, the above mentioned life is waiting....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி இருந்தாலும் ஆரம்ப கால வாழ்க்கை பொதுவாக இப்படித்தான் நண்பரே. உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள். தொடர்ந்து வருகை தாருங்கள்.

      நீக்கு
  5. வெளிநாட்டு வாழ்க்கையில் பெற்றதைவிட இழந்தவை அதிகம் தான் தூக்கமும் அதில் ஒன்று அருமையாக யதார்த்தம் சொல்லும் கவிதை. வாழ்த்துக்கள் வல்லையூரானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் நண்பா. கண்டிப்பாக எத்தனையோ பேர் பஸ்களை தூங்கி வழிவதைக் கண்டிருப்பதால் அவர்கள் நிலையுணர்த்த வந்தது இந்த கவிதை...

      நீக்கு
  6. எங்கள் அனுபவங்கள் உங்கள் கவிதையில்.! :-(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ காட்டான் மாமா. வரவு நல்வரவாகுக. முதல் கருத்து மகிழ்ச்சி. முதலிலேயே உங்களுக்கு முகம் பார்க்கும் கண்ணாடி காட்டி விட்டேனா? பரவாயில்லை. நன்றிகள் உங்கள் வரவுக்கும் கருத்திடலுக்கும்.தொடர்ந்து வாருங்கள் மாமா.

      நீக்கு
  7. சருகாகி மக்கி சாணியாய் மிதிபட்டு
    சாயந்தரதுக்கு மேல சின்னதா சாப்பிட்டு
    சந்தோசம் எண்டத சத்தியமா மறந்து
    சலிப்போடும் அலுப்போடும் வேலைய முடிச்சு,
    என்ற இந்த அலுப்பு நிறைந்த வரிகள் உங்கள் வெளிநாட்டு ஒருநாள் வாழ்க்கை முழுவதையும் சோகத்துடன் உணர்த்திவிட்டது அண்ணா .. என்ன செய்வது புலம்பெயர் தேசத்தில் வாழும் ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையும் இன்று இப்படி தான் அலுப்போடும் , சலிப்போடும் முடிவடைந்து விடுகின்றது ஒட்டு மொத்த புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கை நிலையை உங்கள் எழுத்து மூலம் திரையிட்டு காட்டிவிட்டீர்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து பயணம் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன ஒரு திருத்தம் சகோதரி. என் வெளிநாட்டு வாழக்கை என்பதை விட இங்கு பலரின் வெளிநாட்டு வாழ்க்கை என திருத்தலாம். பலர் எனக்கு முகநூலில் வந்து தங்களை பார்த்து அல்லது தங்களுக்கு எழுதியதாக உணர்ந்ததாக குறிப்பிட்டனர். வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரி.

      நீக்கு
  8. ஏலே...
    அவனுக்கு என்ன
    வெளிநாட்டில இருக்கான்
    ஏதோ டவுனு பஸ்ல போயிட்டு வார மாதிரி
    போறான் வாரான்
    என்னதான் செய்யுரானோ ...
    நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை இல்லையே

    இப்படி பலர் என் முதுகிற்கு பின் பேசுவதை காதை தீட்டி
    கேட்டிருக்கிறேன்....
    பணம் எங்கேயும் மரத்தில் காய்பதல்ல ...
    வெளிநாட்டில் பணிபுரிவோர் படும் அவஸ்தைகள் ஏராளம்...
    இங்கே அதில் சில
    உங்கள் எழுத்துக்களில் மின்னுகிறது...

    கோடானுகோடி கதை சொல்லும் வெளிநாட்டு
    அனுபங்களில் மூழ்கித் திளைத்தவர்கள் தான்
    இதன் தாக்கத்தைப் பற்றி புரிந்துகொள்ள முடியும்...

    அருமை அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏதோ இதை தொட்டு செல்ல வேண்டும் என்று தோன்றியது. பலரது அனுபவங்கள் தான் இந்த கவிதை அண்ணா. நன்றிகள் அண்ணா வரவுக்கும் கருத்திடலுக்கும்.

      நீக்கு
  9. வணக்கம் முகுந்தன்.உங்கள் பக்கத்தில் முதல்தரம்.முதல் தரமே வெளிநாடுகளில் வாழும் எங்களை அடிச்சுத் தூக்கிக் காயவிட்டமாதிரியான கவிதை.உணர்ந்து அனுபவிக்கவேணும் எதையும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா. வாங்கோ ஒருதரமல்ல அடிக்கடி வாங்கோ. ஒண்டு எனக்கு விளங்கேல்ல ///எங்களை அடிச்சுத் தூக்கிக் காயவிட்டமாதிரியான/// இது வாழ்த்தா திட்டா? எது எப்படிஎண்டாலும் அன்பான வருகை. வரவேற்கின்றேன். தொடர்ந்தும் வாருங்கள். வருகைக்கும் கருத்திடளுக்கும் நன்றிகள் அக்கா.

      நீக்கு
  10. வெளிநாட்டு வாழ்க்கையை படம்பிடித்து போட்டுவிட்டீர்கள்.

    இதுபுரியாமல் இங்குசனம் வீண்செலவு செய்து பணமூட்டைக்காய் காத்திருப்பதுதான் கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் மாதேவி. யதார்த்தத்தை கவியாக்கினேன். அவ்வளவுதான். தொடர்ந்து வாருங்கள், ஆதரவு தாருங்கள். வருகைக்கும் கருத்திடளுக்கும் நன்றிகள்.

      நீக்கு
  11. யதார்த்தம் நிறைய பேருக்கு தெரிவதில்லை

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.