செவ்வாய், 19 மார்ச், 2013

அகிம்சை.


ஒரு சில தசாப்தங்களுக்கு
முதல் வரை
அகிம்சை என்றால்
காந்தி என்றனர்.
அதனையே உலகும்
காந்தியம் என்றது.
காந்தி நாடு என்று
பாரதத்தை கொண்டாடியது.




உண்மை அகிம்சை
எது என்று
உலகுக்கு சொல்லி
பாரதத்தின் முகமூடி
கிழித்தான் பார்த்தீபன்



பாரதம் பார்த்திருக்க
பசியில் பிள்ளை நீர்த்து
பன்னிரண்டாம் நாள்
வீர சுவர்க்கம் சென்றான்
அகிம்சை தீயை
உலகில் ஏற்றிய
தீபச் சுடர் திலீபன்.



பௌத்தத்தை
அகிம்சை மதமென்றனர்
மதங்கொண்ட பௌத்தர்
மனட்சாட்சி இல்லாமல்
கொலைக்காட்சியை
உலகிற்கு காட்டினர்
முள்ளிவாய்க்களில்



அந்த ஆ.. கிம்சையாளருக்கு
அரவனைப்பு கொடுத்தது
கிம்சையாளர் ஆளும் ஹிந்தியா



தமிழன் என்ற உணர்வு
தலை தூக்கிய பொழுதெல்லாம்
தரங்கெட்ட தலைமைகள் - அதை 
தகர்த்தெறிய தலைப்பட்டன.



மறத்தமிழர் எழுந்தனர்
மாணவராய்ப் பொங்கினர்
புறப்பட்டனர் புதுவழியில்
பட்டினி ஆயுதத்தை
பலமாய் பிடித்தனர் 



முன்னவன் காட்டிய பாதையில்
முழுதாய் குதித்தனர்
மூண்டது தீ 
முழு நாடும் பரவியது.



அடக்கத்தான் பார்த்தனர் சிலர் -அவர்களை 
அடக்கி வைத்தனர் இவர்கள் 
தம்மைத் தொடருங்கள்
என்றனர் சிலர்
வாருங்கள் எம் பின்னே 
என்றனர் இவர்கள்
அரசியல் சாயத்தை 
அள்ளி வந்தனர் சிலர்
அங்கேயே நில்லுங்கள் 
என்றனர் இவர்கள் 



இவர்கள் உங்கள் பிள்ளைகள்
இவர்களுக்கு புரிந்தது - ஏன்
உங்களுக்கு மட்டும் புரியவில்லை
இணைத்திடுங்கள் - உங்கள்
கைகளை இவர்களோடு
கொடுத்திடுங்கள் - உங்கள்
ஆதரவை இவர்களுக்கு



இணைப்பினால் 
இனிதாய் ஒரு
நாடு பிறக்கும்.




வல்வையூரான்.

Post Comment

13 கருத்துகள்:

  1. திரையுலகில் மயங்கிக் கிடப்பவர் அல்ல..
    தீரம் கொண்டவர் என எண்பித்தார்
    தியாகச் செம்மல்களாய் எம் முன்னே
    தீயிலும் குதித்தனர்...
    தருகின்றோம் என் கண்ணீர் காணிக்கை..

    கவிதை அருமை சகோ.. உணர்வுகளின் பிரதிபலிப்பு...

    பதிலளிநீக்கு
  2. நல்ல வரிகள்...

    விரைவில் நல்லது நடக்கட்டும்... நடக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் அண்ணா. கண்டிப்பாக மாற்றம் வரும் நம்புவோமாக.

      நீக்கு
  3. நல்ல கவிதைகள்

    இந்த
    தீபந்த ஒளி படரட்டும்
    வெளிச்சம் நிச்சயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் நண்பரே. முதல் வருகை. வரவேற்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  4. காந்தியத்தில் எனக்கும் சில மாற்றுக் கருத்துக்கள் உள்ளன சகோதரரே...
    இன்றைக்கு வெடித்திருக்கும் மாணவர் போராட்டம் திடீரென்று
    முளைத்ததல்ல .. அமைதியாய் செல்வோம் ஏதாவது செய்வார்கள்
    என்று காத்திருந்து மனம் வெறுத்துப் போனதால் உணர்வுகள் வெடித்து
    எழுந்த பிரளயம்...
    குனியக் குனிய குட்டுவார்கள்...
    நிமிர்ந்தெழுந்தார் மாணவர்...
    கைகள் இணைப்போம்....
    வெல்லட்டும் மாணவர் படை...
    எட்டாத வானமும் விண்டு வழி விடட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக அண்ணா. மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்றான் முன்னவன். பின்னவர் வெடித்துள்ளனர். அவர்கள் புரட்சிக்கு தலைவணங்குகின்றேன்.

      நீக்கு
  5. அகவையிருபதுக்குள் நின்று
    மீள ஏற்றிவைத்தீரே ஈழப்பெரும்தீயை
    தாயக தேசத்தில்,
    ஞாலத்தில் பெரியோர் நீவீரே,
    என் தமிழாலும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் நன்றிகளை எப்படி மட்டுமே சொல்ல வேண்டிய நிலை.

      நீக்கு
  6. ம்ம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் !

    பதிலளிநீக்கு
  7. சிறப்பான பகிர்வு .உண்மை என்றும் வெல்லும் அன்று
    எங்கள் உணர்வுகளும் இவ்வுலகிற்கு புரியும் ! மிக்க
    நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு

  8. வணக்கம்

    கருத்தைப் படித்துக் கலங்கின கண்கள்!
    ஒருகை தருமோ ஒளி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.