சனி, 22 ஜூன், 2013

ஹைக்கூக்கள் 17


 
படபடத்தபடி வானில் பறந்தது
பட்டம் மட்டுமல்ல
விட்டவன் மனதும்.
 


வெட்டப்பட்டபோது அழாதது
மரம் அழவைத்தது
மழை இல்லாதபோது.தகிக்கும் வெய்யிலும்
குளுகுளு என்று தெரிந்தது
ஏசிஅறையில் இருந்தது ஓவியம்.சோகத்திலும் சுகத்திலும்
எப்போதும் என்னருகில் - நீயே
வானொலி.


 
அழுதபடி முதல்வகுப்பில் நுழைந்தது குழந்தை
பார்த்து சிரித்துக்கொண்டது
பள்ளியிலிருந்த ஆலமரம்.மண்ணோடு போராடியபடி வளர்ந்தது விதை
வேகமாக மேய்ந்தது
ஆடு.
வல்வையூரான்.

Post Comment

18 கருத்துகள்:

 1. அனைத்தும் சிறப்பே!

  மனந்தொட்டது

  மண்ணோடு போராடியபடி வளர்ந்தது விதை
  வேகமாக மேய்ந்தது
  ஆடு.//

  எம் மண்ணில் இன்றும் நடப்பது...:(

  வாழ்த்துக்கள் சகோ!

  த ம.3

  பதிலளிநீக்கு
 2. அழுதபடி முதல்வகுப்பில் நுழைந்தது குழந்தை
  பார்த்து சிரித்துக்கொண்டது
  பள்ளியிலிருந்த ஆலமரம்.//

  மிகவும் ரசித்தேன்....!

  பதிலளிநீக்கு
 3. அழகான வரிகள்...

  மரம் கவிதை அருமை...

  வாழ்த்துகள்.....!

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/5.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அண்ணா உங்களுக்கும், அறிமுகப்படுத்திய வெற்றிக்கும்..

   நீக்கு
 5. இன்றைய வலைச்சரத்தில் தொடுக்கப்பட ஒரு (வலைப்)பூ உங்களது!

  வாழ்த்துக்கள் சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் சகோதரி உங்களுக்கும், அறிமுகப்படுத்திய வெற்றிக்கும்..

   நீக்கு
 6. அனைத்தும் சிறப்பு! என்னை கவர்ந்தது கடைசி ஹைக்கூ! நன்றி!

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.