புதன், 31 ஜூலை, 2013

ஹைக்கூக்கள் 18


 
மலர்ந்திருந்ததை கண்டதும்
மீண்டும் மலர்ந்தது
காதல் மனது.
 
உனக்கான காத்திருப்பு
உண்டு மகிழ்கின்றனர்
புறாக்கள்.
 
 
 
கட்டளைகள் மாறிக்கொண்டன
காசுக்கட்டுக்கள்
கை மாறிக்கொண்டதால்.
 
 
 
வாங்கிய லாட்ரியில் கோடி பரிசு
பழையதுதான்
அதிஸ்டம் சொன்ன குடுகுடுப்பைக்காரனுக்கு.
 
 

முட்களில் இருந்தாலும்
ரோஜா மலரில்
இல்லை முட்கள்தூய நதியில்
ஆனந்தமாக, கூட்டமாக குளித்தன
பொலிதீன் குப்பைகள்


 
காற்றுக்கள்
கனலானது
ஜூலை 5
வல்வையூரான்.

Post Comment

6 கருத்துகள்:

 1. கூக்கூ இது ஹைக்கூ எனக்
  கூறிய யாவும் சிறப்பு!

  வாழ்த்துக்கள் சகோ!

  த ம.2

  பதிலளிநீக்கு

 2. கட்டளைகள் மாறிக்கொண்டன
  காசுக்கட்டுக்கள்
  கை மாறிக்கொண்டதால்.//

  செம ஹைக்கூ மிகவும் ரசித்தேன்...!

  பதிலளிநீக்கு
 3. அனைத்தும் அழகாக உள்ளது... அதிலும் அந்த பாலிதீன் ஹைக்கூ அழகு...

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.