பல்வேறு எண்ணங்கள்
பல நூறு பிரச்சனைகள்
மண்டையில நிண்டு குடையும்
குடைகின்ற பிரச்சனைகளை
குவித்தொரு பக்கம் வைத்து
குழப்பத்திலிருந்து மீள நினைக்கும் மனசு
மனசது நினைத்துவிட்டால்
மாளுமோ பிரச்சனை
அண்டை அக்கம் அரட்டும் வாய்
வாயரற்றியதால் வலுக்கொள்ளும்
வழுக்கிபோகவிருந்த பிரச்சனைகளும்
வம்பு சண்டைகளுக்கும் வழிவிட்டு நிக்கும்
நிக்கின்றவரிடமெல்லாம் அரற்றி
நிம்மதியை நிலையாய்த்தொலைத்து
நீ கண்ட பலன் தான் என்ன?
என்ன கஷ்டங்கள்
என்ன துன்பங்கள் வந்தாலும்
ஒரு கண நேரமொதுக்கு அதற்கு
அதற்கான நேரத்தில்
அமைதியாய் சிந்தனை செய்
நெற்றிக்கண்ணாய் அகக்கண் திறக்கும்
திறந்த சிந்தனை
தெளிவாய் சொல்லும் தீர்வு
திடமாக நம்பு! தீர்வுகளை வெல்லு!!
வென்றபின் பார்
வெற்றிடமனது நிரம்பியிருக்கும்
நிரம்பிய சந்தோசத்தோடு நிம்மதியாயிரு
வல்வையூரான்.
Tweet | ||||
திறந்த சிந்தனை
பதிலளிநீக்குதெளிவாய் சொல்லும் தீர்வு
திடமாக நம்பு! தீர்வுகளை வெல்லு!!
>>
தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் அருமை
நன்றிகள் ராஜி.
நீக்கு/// அமைதியாய் சிந்தனை செய்...
பதிலளிநீக்குநெற்றிக்கண்ணாய் அகக்கண் திறக்கும்... ///
கண்டிப்பாக... சிறப்பான கருத்துள்ள வரிகளுக்கு வாழ்த்துக்கள்....
நன்றிகள் அண்ணா.
நீக்கு////////////அமைதியாய் சிந்தனை செய்
பதிலளிநீக்குநெற்றிக்கண்ணாய் அகக்கண் திறக்கும்
திறந்த சிந்தனை
தெளிவாய் சொல்லும் தீர்வு
திடமாக நம்பு! தீர்வுகளை வெல்லு!! ////////////
முற்றிலும் உண்மைதானே... அமைதி மட்டும் மனதில் குடிகொண்டால் போதும்.. எதையும் தீர,தெளிவாக சிந்தித்து, செயல்பட்டு வெற்றிகளை அள்ளிவிடலாம்.. இதுதான் வெற்றியின் சூட்சுமும் கூட..
பகிர்வுக்கு நன்றி !!!
கண்டிப்பாக நண்பா.
நீக்குநிக்கின்றவரிடமெல்லாம் அரற்றி
பதிலளிநீக்குநிம்மதியை நிலையாய்த்தொலைத்து
நீ கண்ட பலன் தான் என்ன?
மேலும் மேலும் குழப்பம் தான் -சிறந்த வரிகள்
வாழ்த்துக்கள் சகோ .
நன்றிகள் சகோதரி.
நீக்குபிரச்சனைகளுக்கான தீர்வை மிகவும் அழகான அந்தாதி' யாப்பில் கூறிய விதம் சிறப்பு... அதிலும் முதல் இரண்டு அடிகளை மோனை'யில் சிறப்பாக கூறியுள்ளீர்கள்... சிறப்பான படைப்பு... எந்தப் பிரச்சனைகள் வந்தாலும், அதற்க்கு நேரம் கொடுத்து அமைதியாக சிந்தித்தால் விடுபடலாம் என்பதை
பதிலளிநீக்குஅமைதியாய் சிந்தனை செய்
நெற்றிக்கண்ணாய் அகக்கண் திறக்கும்
என கூறிய விதம் சிறப்பு....
வாழ்த்துகள் அண்ணா... நல்லதொரு படைப்பு...
நன்றிகள் தம்பியா.
நீக்குதமிழ் மணம்: 4
பதிலளிநீக்குஏன் தமிழ் 10, இன்ட்லியில் இணைக்காமல் விட்டுவிடுகிறீர்கள்... அதிலும் இணைத்து விட்டேன்...
பதிலளிநீக்குவணக்கம்!
வல்வையூா் வாணா் வகுத்த வழியாவும்
தொல்லையைப் போக்கும் தொடா்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
கவிதைக்கு கவி புனையும் வித்தகரே
நீக்குகுவித்தேன் கூறினேன் நன்றி.
பதிலளிநீக்குதமிழ்மணம் 5
வென்றபின் பார்
பதிலளிநீக்குவெற்றிடமனது நிரம்பியிருக்கும்
நிரம்பிய சந்தோசத்தோடு நிம்மதியாயிரு//
ரசித்த வரிகள்...!
நன்றிகள் மனோ அண்ணா.
நீக்குநல்ல சிந்தனை
பதிலளிநீக்குநன்றிகள்
நீக்குகுவித்தொரு பக்கம் வைத்து
பதிலளிநீக்குகுழப்பத்திலிருந்து மீள நினைக்கும் மனசு//ரசித்த வரிகள் ஐயா அருமையான ஜோசனை.வாழ்த்துக்கள்.
நன்றிகள் நேசம்.
நீக்குகருத்துச் செறிவுள்ள கவிதை. "வாயரற்றியதால் வலுக்கொள்ளும்
பதிலளிநீக்குவழுக்கிபோகவிருந்த பிரச்சனைகளும்
வம்பு சண்டைகளுக்கும் வழிவிட்டு நிக்கு?
நன்றிகள் ஐயா.
நீக்குநன்றி அண்ணா !! எனக்கு தேவையானதொரு அறிவுரை இது !! நேரம் ஒதுக்கி சிந்தித்து தீர்வு நோக்கி நகர விளைகிறேன் :)
பதிலளிநீக்குவணக்கம் துரை. வாருங்கள். தொடர்ந்து வாருங்கள்.
நீக்கு