சனி, 31 ஆகஸ்ட், 2013

ஹைக்கூக்கள் 20
அகரத்திலும்
முதலாய் நின்றது
அம்மா.


குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்துகொண்டிருந்தான் அவசரமாக
முடிந்துகொண்டிருந்தது
விவாகரத்து அனுமதித்த வாரத்துக்கான குழந்தை பார்க்கும் நேரம்.


பரவுகின்றது ஒளிவெள்ளம்
அடிபட்டுப் போகின்றன
பல இருள்கள்.


தனித்திருந்தன இரட்டைப்பனை
தொலைத்திருந்தன
தூரதேசத்தில் உறவுகளை.


குடிக்கையில்
குழம்பியது
அவள் மனதே.


பறந்துகொண்டிருந்தது கொடி
விரட்டிக்கொண்டிருந்தது
காற்று.

 

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்து 
 

 சென்னையில் நடைபெறுகின்ற வலைப்பதிவர்கள் மாநாட்டில் நாங்கள் நேரில் கலந்து கொள்ளவில்லை, முடியவில்லை  எனினும் எங்கள் உள்ளங்களால் கலந்து அந்த நிகழ்ச்சி சிறப்புற அமைய வேண்டும் என இந்த பதிவின் வழி வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கின்றோம். சந்தர்ப்பம் அமையும் போது நாங்களும் கலந்து சிறப்பிப்போம்...  

நிகழ்ச்சி சகல முறையிலும் சகலரும் சந்தோசப்படும் வகையிலும் அமைய எங்கள் வாழ்த்துக்கள்.
 வல்வையூரான்.
 


Post Comment

7 கருத்துகள்:

 1. அருமை! அத்தனை வரிகளும் தொட்டுச் சென்றன உள்ளமதை!

  வாழ்த்துக்கள் சகோ!

  த ம.2

  பதிலளிநீக்கு
 2. சிறந்த படத் தேர்வுகளுடன் ஒன்று கூடிய கைக்கு வரிகள் அருமை !
  வாழ்த்துக்கள் சகோதரரே தொடரட்டும் இனிதாய் மேலும் .....

  பதிலளிநீக்கு
 3. அத்தனை வரிகளும் சிறப்பாக உள்ளது அண்ணா...

  குடிக்கையில்
  குழம்பியது
  அவள் மனதே.

  சிறப்பான வரி..

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.