செவ்வாய், 3 செப்டம்பர், 2013

வலைப்பதிவர்கள் திருவிழா 2013.



எழுத்தாளர்கள் என்று
ஒரு காலம் இருந்தவர்கள் சிலரே
அந்த முறையகற்றி
வலை வழியாக
வந்த கருத்தெல்லாம் பதிந்து
நிலையாக அதனை
நிமிடதே பகிர்ந்து
நிலையுலகம் சுற்றியோர்
வலைப்பதிவர்கள்.


ஓரோரிடத்தில் நின்றோரை
ஓரிடத்தழைத்து
ஓரண்டுக்கு முன்னே
திருவிழாக் கண்டனர்
அது முதலாம் வலைபதிவர் திருவிழா



இன்று
சிங்காரச் சென்னை தனிலே
சிந்தை மகிழ்ந்தோர் எல்லாம்
சித்தம் குளிர குழுமினர்
ஆடினார் பாடினர்
ஆரவாரம் செய்தே
ஆலிங்கனம் செய்தனர்
இது இரண்டாம் வலைபதிவர் திருவிழா
 
அந்த சந்தோசம்
நேரில் எனக்கில்லை
இருக்கட்டும்
இன்னொரு திருநாளில்
யான் காண்பேன் இன்முகங்களை


இன்றைய தினத்திலும்
இருக்குதாம் ஒரு வழி
தொ(ல்)லை பேசி வழியாக
தொலைவிலிருந்தே
எல்லையில்லா ஆனந்தத்துடன்
உங்கள் எல்லையில் வந்து
உரைக்கின்றேன் வாழ்த்துக்கள் கோடி.

வளமான உங்கள் இல்லை எங்கள் விழா
வான் புகழ் கொண்டு சிறக்கட்டும்

ஒலிக்கட்டும் பதிவர்கள் குரல்
ஓங்கட்டும் பதிவர்கள் புகழ்.


(குறிப்பு: இந்த கவிதை எழுதப்பட்டது கனடா நேரம் இரவு 2.30(01.09.2013). ஆனால் காலை 5.00 மணிவரை ஆர்வத்தோடு காலையில் வேலை இருந்தும் முழித்திருந்து  மூன்று முறை தொடர்புகள் எடுத்தும் அங்கிருந்த சிலருடன் பேச முடிந்ததே அல்லாமல் விழாவில் படிக்க முடியவில்லை என்பது சோகமே...)
வல்வையூரான்.

Post Comment

31 கருத்துகள்:

  1. தாங்கள் அழைக்கும் போது (இரண்டாவது பகுதில்) வேறு ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது... காலை பதிவர்கள் அறிமுகம் போது அழைத்திருந்தால் சிறப்பான வரிகளை அனைவரும் கேட்டிருக்கலாம்...

    விழாவில் படிக்க முடியாதது வருத்தமே... இருந்தாலும் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் அண்ணா. உங்களோடும் மற்றவர்களோடும் உரையாடியதே சந்தோசமாக இருந்தது.

      நீக்கு
  2. கவிதை அருமை
    விழாவில் படிக்கப்பட்டிருந்தால்
    நிச்சயம் அது விழாவிற்கு கூடுதல் சிறப்பு
    சேர்த்திருக்கும்.திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
    கூறியுள்ள கருத்து சரிதான்.நானும் அவர் அருகில்தான்
    இருந்தேன். பதிவாக்கி அனைவரும்
    அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் ரமணி ஐயா. அன்றைய தினத்தில் தான் உங்களோடு பேச கிடைத்தது. மிகுந்த மகிழ்ச்சி. புதிய உறவுகளை பெற்றேன்.

      நீக்கு
  3. விழாவில் உங்க கவிதை கேக்க முடியலை. ஆனா, அழகான கவிதை. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் பேசிவிட்டு தமிழ்வாசியிடம் பேச செல் எடுத்து சென்று கொடுத்தது நான் தான்! விழாவிற்கு வராவிடினும் ஆர்வத்தோடு விசாரித்து மகிழ்ந்தது மகிழ்வு தந்தது! சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் எல்லாரையும் சந்தித்திருக்கலாம். ம்ம்ம்...

      நீக்கு
  5. சிறப்பான வரிகள் அங்கே கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. தங்களிடம் பேச முடியவில்லை.. வருத்தமே.

    பதிலளிநீக்கு
  6. விழாவில் கவிதை படிக்க முடியாமல் போனது ஒரு குறையே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஐயா முதல் வரவாக இங்கு. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

      நீக்கு
  7. உங்கள் உணர்வுகளை கவிதை வரிகளாக்கியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. கவிதைக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை

    பதிலளிநீக்கு
  9. நீங்கள் என்னிடம் பேசும் போது வேறு பேச்சாளர் பேசிக்கொண்டிருந்ததால் உங்கள் கவிதை மேடையேறவில்லை..

    ஆனாலும் உங்களுடன் பேசியது மிக்க மகிழ்ச்சி தோழரே...

    பதிலளிநீக்கு
  10. அருமையான கவிதையை திருவிழாவில் அரங்கேற்ற முடியாமைக்கு வருத்தமே... அடுத்த வருடம் நேரில் வர முயற்சிக்கவும் நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய முகங்களாக பலர் வந்துள்ளீர்கள். தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  11. கலந்து கொள்ள
    இயலவில்லை என்றாலும்
    உங்கள் கவிதை அழகு...
    நீங்கள் இங்கு வர.
    இயலவில்லையெனினும்
    உங்கள் இதயம்
    இங்கிருந்ததை உணர்கிறோம் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் யாமிதாஷா. நீங்களும் முதல் வருகை. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  12. பரவாயில்லை அண்ணா. முதல் முதல் ஏன் தளத்துக்கு வந்திருகிறீர்கள். தொடர்ந்தும் வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  13. அன்பின் வவ்வையூரான் - அருமையான கவிதை - இரு திருவிழாக்களைப் பற்ரியும் எழுதப்பட்ட கவிதை - நன்று நன்று - அயலகத்தில் இருந்து கொண்டு இங்கு நடக்கும் திருவிழாவில் தொலைபேசி மூலம் கலந்து கொண்டு கவைதி வாசித்தது நன்று - தவிர்க்க இயலாத காரணங்களீனால் மேடையில் கவிதை வாசிக்க இயலவில்லை போலும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் ஐயா. பார்க்கலாம் அடுத்து வரும் காலங்களில்...

      நீக்கு
  14. வணக்கம் அண்ணா... தங்கள் கவிதை சிறப்பாக உள்ளது அண்ணா, இந்த முறை இல்லாவிட்டாலும் என்ன அண்ணா, அடுத்த முறை சந்தித்து விட்டுப் போகிறோம். உங்கள் ஆர்வம் பிரமிப்பூட்டுகிறது. அதே போல் தொடர்ந்து இங்கும் எழுவீங்கலாம்???

    பதிலளிநீக்கு
  15. அழகாக இருக்கிறது நண்பரே தங்களின் படைப்பு...

    அடுத்த முறை ஈரோட்டில் வைப்பதாக முடிவு செய்துள்ளார்கள்...

    கண்டிப்பாக அதில் தங்களின் படைப்பு வைரமாய் ஜொலிக்கட்டும்...

    எங்கிருந்தாலும் உள்ளத்தால் மனக்கண்ணால் கண்டு வாழ்த்திய வாழ்த்து அற்புதம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம். மதுரை என்றார்களே?!!! நன்றிகள் உங்கள் பாராட்டுதல்களுக்கு.

      நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.