வியாழன், 17 அக்டோபர், 2013

புரியாத புரிதல்.


புரிதல்கள் இரண்டு
தமக்குள்
சந்தித்துக்கொண்டன

தமக்குள் புரிந்துணர்வில்லாமலே
பேசிக்கொள்ள ஆரம்பித்ததன
புரிதல்கள்;
புரிதல் பற்றியே

புரிதல்கள் பற்றிய
சர்ச்சை
புரிதல்கள் இல்லாததால்
புரிதல்களுக்குள்
முற்றிக்கொண்டிருந்தது

ஒரு புரிதல்
தன் பங்குக்கு
புரிதல் பற்றிய தன்
விளக்கத்தினை
பல்வேறுவகையில்
புரியவைக்க முயற்சித்தது
இன்னொரு புரிதலிடம்

கொஞ்சமும் புரிந்துகொள்ள
முடியாத இரண்டாம் புரிதல்
முதலாம் புரிதலின்
புரிதல் பற்றிய கொள்கைகளை
புரிதல் இல்லாமலே
விமர்சித்துக் கொண்டது.

இந்த முறை
புதிய கொள்கைகளோடு
இரண்டாம் புரிதல்
தன் பங்குக்கு ஆரம்பித்தது.

முதலாம் புரிதலின்
புரிதல் பற்றிய
கொள்கைகள்
எப்படி இரண்டாம் புரிதலுக்கு
புரியவில்லையோ
அப்படியே இப்போது
முதலாம் புரிதலுக்கும்
ஏதும் புரியவில்லை

புரியாத புரிதல்கள்;
புரிந்துகொள்ள முயற்சிக்காத புரிதல்கள்;
புரிதல் என்பதன் உண்மையைப்
புரியாத புரிதல்கள்;
தமக்குள்  மீண்டும்
சர்ச்சையை வலுப்படுத்திக்கொண்டன
புரிதல் பற்றியதாகவே
எங்கள் தமிழ் கூத்த(ட்ட)மைப்பைப் போலவே
புரியாத புரிதல்களுடன்.

வல்வையூரான்.

Post Comment

25 கருத்துகள்:

  1. புரிந்து விட்டது... முடிவில் உள்ள படம் மூலம் புரிந்து விட்டது... வித்தியாசமான சிந்தனை... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. கூட்டமைப்பில் புரிதல் அவசியம் என்பதை இக் கவிதை உணர்த்துகிறது....

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் எனக்கு புரியவில்லை......தனபாலன் பாராட்டி இருக்கிறார் என்றால் ஏதோ நல்ல விஷயத்தைதான் சொல்லி இருக்கிறீர்கள். மீண்டும் ஒரு முறை படிக்க முயற்சி செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. ரெண்டு முறை வாசிச்சேன்... கொஞ்சம் புரிஞ்சது...

    அப்புறம் கடைசி பத்தியை மறுபடியும் வாசிச்சேன்....

    நல்லா புரிஞ்சது...

    பதிலளிநீக்கு
  5. புரிதல் பற்றியதாகவே
    எங்கள் தமிழ் கூத்த(ட்ட)மைப்பைப் போலவே
    புரியாத புரிதல்களுடன்.//

    ஆனால் எங்களுக்கு எவ்வித
    குழப்பமும் இல்லை
    மிகச் சரியாகப் புரிந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. அண்ணா.... புரிதல் நல்லாவே புரியுது... நல்ல கவிதை...

    பதிலளிநீக்கு
  7. யாருக்காகவோ எழுதப்பட்ட கவிதை என்பது மட்டும் புரிகிறது!

    பதிலளிநீக்கு
  8. புரிதல்கள் பற்றிய
    புரிதல் இலாச் சர்ச்சைகளா
    புரிந்திருந்தும் புரியாது போன்ற
    சுயநலத்தின் பசப்பல்களா?

    பானையை அடுப்பில் வைக்கு முன்னரே
    புளித்த வயிறுகளின்
    பிச்சுப் பிடுங்கலா
    பசிக்கும் வயிறுகள்
    சோற்றுக்குப் காத்திருப்பது புரியாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களுக்கு இது எல்லாம் புரியவில்லை அல்லது புரிந்ததை காட்டிக்கொள்ள விரும்பவில்லை ஐயா.

      நீக்கு
  9. புரிதலை பற்றி புரிந்துதான் எழுதியிருக்கிங்க...புரிஞ்சிகிட்டா சரி!

    பதிலளிநீக்கு
  10. புரிதல்களை நன்கு
    புரிந்து வைத்திருக்கிறீர்கள்..
    நாங்களும் புரிந்துகொள்ளும் வகையில்
    புரிதல்கள்
    புதிராக இல்லாது
    தெளிவாக
    புரிகின்றன...
    நன்று சகோதரரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியவேண்டிய கூத்தமைப்புக்கு புரிந்தால் தமிழர்களுக்கு விடிவாக அமையலாம் அண்ணா...

      நீக்கு
  11. புரிதல் என்றாலே குழப்பம்தான் கூத்தணி (கூட்டமைப்பு)போல சமகால அரசியல் நையாண்டிக்கவிதை அழகு !

    பதிலளிநீக்கு
  12. புரிதலையே இப்படிப்போட்டிக் குழப்பீற்றிங்களே பாஸ்!
    புரியாமல் எழுதிறதுக்குப்போர்தான் கவிதையென்று தமிழ்வாத்தியார் அச்சாணிமாதிரி அடிச்சிட்டார்போல்...
    அண்ணே என்னண்ணே இது?

    பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.