பொருமி தவித்தன ஏதிலியாகா ஏதிலிகள்
சாவகாசமாக செருமிக்கொண்டிருக்கிறது
சர்வதேசம்
எட்டி எட்டி பறிக்கின்றாள் கனியை
எட்டவில்லை
ஏங்கியது கன்னிக்காய் மனது.
கொடுத்துக்கொண்டிருக்கிறேன்
தீரவில்லை திகட்டவில்லை
முத்தங்கள்.
வைக்கோல் கன்று காட்டி ஏமாற்றிய பால்க்காரனுக்கு
நிஜக் குழந்தை காட்டப்பட்டது
சிக்னல் பிச்சைக்காரி.
பிடியின் வழி
வளைந்து வளர்கின்றன
பானைகளும் குழந்தைகளும்.
பிடித்தபடி வளர்ந்தது பானை
வளரவில்லை
அவர்தம் வாழ்க்கை.
கிளறுகின்றது கோழி
குப்பையோடு
குடலையும் - பசி
மனிதாபிமானம் அற்றவர்களெனப்பட்டவர்களுக்கு(???!!!)
மனிதாபிமானம் உள்ளவர்களெனப்பட்டவர்கள்(???!!!)
வழங்குவது மரணம்!!!.
இடைவிடாத அடை மழை
சுகமாக தூங்குகிறது
என் அடுப்பில் பூனை.
கொட்டும் மழை
தூக்கம் தொலைத்த குழந்தை
ஏக்கம் தரும் கட்டில்...
வென்றவர்களென்றவர்கள்
வீழ்ந்தார்கள், வென்றார்கள்
வீழ்ந்தவர்கள் - இலங்கை தேர்தல் முடிவு
வல்வையூரான்.
Tweet | ||||
ஒவ்வொன்றும் அருமை... சில உண்மைகள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றிகள் அண்ணா.
நீக்குஅன்பின் வவ்வையூரான் - குறுங்கவிதைகள் அனைத்துமே அருமை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குநன்றிகள் ஐயா. உங்கள் வருகையால் உளம் மகிழ்ந்தேன்.
நீக்குஎட்டவில்லை
பதிலளிநீக்குஏங்கியது கன்னிக்காய் மனது........
ஏங்கும் ஏங்கும்....
அனைத்தும் அருமை.... வாழ்த்துக்கள் அண்ணா...
வணக்கம் தம்பி வாங்கோ. ஏங்குவது உங்கள் கவிகளைப் பார்க்கும் போதே தெரிகிறதே. எங்கள் வாய்மொழி/வழி உங்கள் உணர்வுகள். நன்றிகள் தம்பி.
நீக்குஇனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்கள் வாழ்க்கையிலும் கலர் கலராய் வெடிக்கட்டும் மகிழ்ச்சி
நீக்குமரண தண்டனை பற்றிய ஹைக்கூ நச்.
பதிலளிநீக்குநன்றிகள் சகோதரி.
நீக்குநிழற்படமும் துளிப்பாக்களும்
பதிலளிநீக்குஒன்றுடன் ஒன்று போட்டிபோடுகின்றன சகோதரரே..
அழகோவியமாக இருக்கிறது..
வாழ்த்துக்கள்...
நன்றிகள் அண்ணா.
நீக்குஅனைத்தும் சிறப்பு! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றிகள் அண்ணா. உங்கள் வாழ்க்கையிலும் என்றும் கலர் கலராய் வெடிக்கட்டும் மகிழ்ச்சி
நீக்கு
பதிலளிநீக்குஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
மணக்கும் தமிழால்
நீக்குமனம் மகிழ வாழ்த்திய
வளமான கவிஞா
நன்றிகளோடு வாழ்த்துரைத்தேன்
வாழ்க பல்லாண்டு.
எட்டி எட்டி பறிக்கின்றாள் கனியை
பதிலளிநீக்குஎட்டவில்லை
ஏங்கியது கன்னிக்காய் மனது..........கவி என்றால் இதுதான் என்று பாடம் கற்பிக்க வேண்டியத ன்மையிலிருக்கிறது அப்படியே நறுக்கென்று சொல்லிவிட்டீர்களே கவிஞரே அருமை......