செவ்வாய், 3 டிசம்பர், 2013

கார்த்திகைத் தீபங்கள். (ஹைக்கூக்கள் 26)
வீரத்தின் விழுதுகள் 
வித்தான முத்துக்கள் 
விழிக்கும் காந்தள் கார்த்திகையில்உறவாக அழுகையிலும்
உணர்வாக எழுகின்றது
உங்கள் ஈகம்வாழ்வை தந்தவர்கள் 
வரலாற்று நாயகர்கள் வருகின்றனர் 
வழியில் மலர்கின்றது காந்தள்இடிக்கப்பட்டு இயல்புநிலை மாற்றப்பட்டது
இடியாமல் 'இன்னும்' பசுமையாய் 
இன்றும் மனங்களில் மாவீரர்கள்நஞ்சு மாலை சுமந்தவருக்கு
மாலையிட்டு மலர்தூவுகின்றோம் - கார்த்திகையில் 
நெஞ்சில் அவரைச் சுமந்து.துயிலுமில்ல தூயவர்க்காய்
துரிதமாக துளிர்க்கிறது 
தூயதாய்க் கார்த்திகை பூகனக்கின்ற இதயங்கள்
இதமாக பூக்கின்றது
கார்த்திகையில் காந்தள்உறங்கும் உறுதிகள்
உணர்சிகளின் உண்மை வடிவம்
உத்தமர் துயிலுமில்லங்கள்விதைகுழிகளில் உறங்குகின்றன வித்துடல்கள் 
வருடந்தோறும் விழிக்கின்றது விடுதலைத்தீ
மாவீரர் வாரம் எதிரிக்கு சிம்ம சொப்பனமானவர்
எங்களுக்காய் தங்களைத் தந்தவர்
காந்தள்களுடன் தீபங்கள் காணிக்கை
உறவுகள் உறுதிகள் மீது அழ
நட்புகள் நசுக்கமாக அழ
சிரித்தன திசைகளெங்கும் தீபங்கள்.மீண்டும் மீண்டும் உடைக்கப்பட்டது
உடையாமல் உண்மைகளின் துயிலுமில்லங்களாக
தூயமனங்கள்.தமிழரின் இருட்டை தகர்த்து ஒளியேற்றியவர்
கார்த்திகையில் கண்களை குளமாக்கியவர்
பூத்திருந்து சிரிக்கின்றனர் தீபங்களாகஅகக்கண்ணில் கந்தகமேனியர் காட்சி
கருக்கொள்கிறது கார்த்திகை மேகம்
கைகள் பற்றின நெய்தீபம்வரிசையாக விதைத்தோம் விதைகுழிகளில்
உழுது மறுத்துழுதுள்ளான்
மறுபடியும் உருவாக்குவோம் எம் வயல்களை

வல்வையூரான்.

Post Comment

8 கருத்துகள்:

 1. அழகான ஹைக்கூக்கள்
  வாழ்த்துக்கள் அண்ணா

  பதிலளிநீக்கு
 2. உறவாக அழுகையிலும்
  உணர்வாக எழுகின்றது
  உங்கள் ஈகம்...............
  அற்புதம் அண்ணா.....வரிகள் சுமக்கின்றன வீரத்தை

  பதிலளிநீக்கு
 3. வீரர்கள் செய்த மகத்தான யாகமே
  ஈரமாக நெஞ்சில் எழும்!

  உணர்வுக் குவியல்கள் உங்கள் படைப்புகளாக...

  அருமை சகோ!

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.