செவ்வாய், 18 மார்ச், 2014

ஹைக்கூக்கள் 29
கோப்பியிலும் வருகின்றது
போதை
கட்டிலில் நீ தருகின்றாய்தேடிப்பார்க்கிறது
என் மனப்புறா
நீ தூதுவிட்ட காலத்தைசுமந்தவள் 
சுமையாகின்றாள்
முதியோர் இல்ல கட்டில்கள்நீ குனிகையில்
சரியும் கூந்தல்
சருகாகின்றேன்கொடுத்த முத்தம் தொடவில்லை
இதயத்தை
இருப்பது உன் நெஞ்சில்கலையாமலே இருக்கிறது
உதட்டுச் சாயம்
கனவில் மட்டும் நீமாகாணத்துக்குள் ஊடறுத்துப் பாயாமலே 
பிரிக்கின்றது
இரணைமடுக் குளம்.பொங்கலுக்காய் வீடு சாணிகொண்டு மெழுகப்பட்டது
வீட்டில் இருந்தது
சாணி மட்டுமே.சாலையெங்கும் படபடத்தன பட்டாசுகள்
புஷ்வானமாகியது
ஏழைக்குழந்தையின் பொங்கல் கனவுதங்கமாய் மின்னுகின்றான்
ஏங்குகின்றேன் 
தினமும் மறைகின்றான் சூரியன் 

வல்வையூரான்

Post Comment

7 கருத்துகள்:

 1. இனிமை, வேதனை, கொடுமை, உண்மை என அனைத்தும் கலந்த கலவை... படங்களும் அருமை...

  பதிலளிநீக்கு
 2. நன்றாக இருக்கிறது....வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 3. மூன்று வரியில் முத்துக்கள் ...

  http://pandianpadaippukal.blogspot.in/

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.