செவ்வாய், 11 மார்ச், 2014

ஒற்றுமையால் தலை நிமிர்வோம்மீண்டும் ஒரு பிறழ்வு
ஏற்றம் தரும் என்ற
ஏதிலிகள் நம்பிக்கையில்
ஏகாதிபத்தியத்தின் அடி
சத்தியத்திற்கும் அடி


எடுத்து வருகின்றது
வெள்ளை மாளிகை
ஏதுமற்ற புஸ்வானம்
ஏதமுள்ள அறிக்கை
ஏமாற்றத்தின் முழு வடிவம்

நம்பிக்கையின் நாரை
நடுவில் இருந்தே
பிடுங்கி எரிகின்றது
உன்மத்தங்கள் நிறைந்ததான
உலகின் மனச்சாட்சி

உருப்படியாக ஏதுமில்லை
உசுப்பேற்றி உரக்ககூவி
உணர்சிகளை மேலிட வைத்து
இறுதியில்
உண்மைகளை உருக்குலைகின்றது
உலகின் நாடுகள்.

இனப்படுகொலை என்பதை
மறந்தேனும் உச்சரிக்க
மறுக்கின்ற
சர்வதேசம்
தருமா எமக்கு நீதி?

அழிக்கப்பட்ட எம்மினத்தின்
அழிவுகளை
ஆராயுமா இந்த
ஐக்கிய நாடுகள் சபை?

தரணியில் என்ன
வேண்டும் எமக்கு?
தமிழா!
தரணி ஆண்டிட்டவர்
தமிழர் நாம்

தரங்கெட்ட பிரிவுகள்
தமக்குள்ளே கொண்டதால்
தனியரசிழந்தோம்

தமிழை காக்கவும்
தமிழன் எனுமினம்
தலைநிமிர்ந்து வாழவும்
ஒன்றாகு
தமிழிற்கே என நின்றாகு

தமிழ் காப்போம்
ஒற்றுமையால்
தலை நிமிர்வோம்.


வல்வையூரான்

Post Comment

3 கருத்துகள்:

 1. நிலை கண்டு
  எழுந்தோர் இல்லை
  இங்கே !

  இமை மூடி
  துயில் கொள்ளும் போது
  மனப் பூச்சி
  அரிக்குது நெஞ்ச!!

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.