சனி, 19 ஏப்ரல், 2014

நினைவும் வலியும்வேகமான மழை நாளொன்றில்
சடசடத்தபடி விழுந்தன
பெருந்துளிகள்
மண்ணை கிளறியபடியே
படபடத்த என் மனதை
கிழிக்கும்
உன் எண்ணங்கள் தந்த
வலியை வேதனையை
மிதமாகவே உணர்ந்தேன்,


என் ஏழைக் கொட்டிலின்
தாவாரத்தில்
ஓலைக்கீற்றில் சொட்டு சொட்டாய்
சிந்தும் துளிகள் போலவே
சொட்டு சொட்டாய் சிந்துகின்றது
என் இதயமும்
உனக்காய் சிலதுளிகளை தினமும்

இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
தூக்கி பந்தாடப்படும் மண்ணைபோல
என் மனம் பந்தாடப்பட்டலும்
இந்த மண் பெற்ற
குளிர்சியைபோல
எங்கோ முலையில்
குளிர்ச்சி தரத்தான் செய்கின்றது
உன் நினைவும் வலியும்

என் கொட்டில் தான் மாளிகையாகுமா?
சொட்டல்கள் தான் தீர்ந்து
மகிழ்ச்சி வெள்ளம் தான் பாயுமா?

வல்வையூரான்

Post Comment

8 கருத்துகள்:

 1. முக்கிய இரு எழுத்துப் பிழைகளை சரி செய்யவும்...

  பதிலளிநீக்கு
 2. உன் நினைவும் வலியும் மிகவும் அழகு!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 5. நினைவுகள்
  மகிழ்ச்சி வெள்ளத்தை
  பாய்ச்சுகிறது..

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்


  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்


  அறிமுகம்செய்தவர்-காவிகவி


  பார்வையிட முகவரி-வலைச்சரம்


  அறிமுகத்திகதி-23.07.2014

  -நன்றி-

  -அன்புடன்-

  -ரூபன்-

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.