சனி, 26 ஏப்ரல், 2014

வெட்கமாக இருக்கின்றதுவெட்கமாக இருக்கின்றது
சொல்லிக் கொண்டே
வெட்கப்படுகின்றாய்

கன்னம் சிவக்க
காதோரம் சூடேற
முன்னம் தலை குனிந்து
முகம் முறுவல் கொண்டு

கையில் இருக்கும்
கடதாசி
கண்டபடி மடிபட
காலின் கட்டைவிரல்
கருத்தில்லாமலே
மண்ணை கீறி
கோலமிட

முன்னம் இரண்டடி வைத்து
முகத்தை சுவரில் சாய்த்து
கன்னம் சுவரில் இருக்க
கைகள்
தேர்ந்த ஓவியனாய்
சித்திரங்கள் வரைய

சிந்தனையில்
என்னை நினைத்து
சிரிப்போடு சிலவார்த்தை
சிணுங்கலோடு சொல்கின்றாய்
சீ...
வெட்கமாய் இருக்கிறது...


வல்வையூரான்

Post Comment

12 கருத்துகள்:

 1. இப்படி வெட்கப் படும் அளவிற்கு அந்த 'கடதாசி'யில் என்னதான் எழுதி இருந்தது?அதை அடுத்த பதிவில் எதிர்ப்பார்க்கிறேன் !
  த ம 5

  பதிலளிநீக்கு

 2. வணக்கம்!

  கவிதையும் நற்படமும் கட்டியெனைப் போடும்
  சுவைத்தேன் மயக்கம் சுழன்று!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  அண்ணா.

  கவிதையின்ஒவ்வொரு வரிகளும் உயிர்ப்பித்து எழுகிறது… போல உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. வணக்கம்
  த.ம 6வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  பதிலளிநீக்கு
 7. உங்க கவிதையைப் படிக்கும் போதே வெட்கம் எனக்கும் தொற்றிக் கொள்கிறது நண்பா... அழகாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 8. வெட்கத்துடன் ஒரு அழகிய வெட்கம் வரும் கவிதை

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.