வியாழன், 17 மே, 2012

நம் கொடி அங்கே எப்போது பறக்கும்?


கொத்து கொத்தாய் தமிழர்கள்
கொன்று குவிக்கப்பட்டது இந்த மே 18
கொன்று குவித்தவன் இன்றும்
கோலோசுகின்றான் குதூகலமாய்

கொல்லப்பட்ட இனம் இன்றும்
கொண்ட வழி மறந்து மண்டியிட்டிருக்குது.


தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா என்றான்
தமிழ் கவி ஒருவன் அன்று.
தலை நிமிர்ந்த தலைகளை எல்லாம்
தாறுமாறாய் தறித்து தரையில் போட்ட
தமிழின அழிப்பு நாள் இந்த மே 18.

சின்னஞ் சிறுசுகளும் சிதறித்தான் போயின
சிங்களந்தான் சிதைத்து முடித்தோ இல்லை
சீக்கியரும் சீனரும் கூடத்தான் சேர்ந்து சிதைத்தனன்.
சிதைகூட மூட்ட முடியாமல்
சிறு குழி வெட்டி சில, பலதாய் போட்டு முடினோம்
சீறி வந்த சினத்தையும் குழிக்குள் போட்டு மூடியதும் இந்த மே 18.

மூடிய சினம் எப்போது முழிக்கும்?
மூதாதையர் ஆண்ட மண் எப்போது கிடைக்கும் ?
மாண்டவர் கனவு எப்போது பலிக்கும்?
மகிழ்ச்சி கடலில் நாம் எப்போது குளிப்போம்?
முத்தமிழ் மீண்டும் எப்போது சிரிக்கும்?
முழுதாய் நம் கொடி அங்கே எப்போது பறக்கும்?

வல்வையூரான்.

Post Comment

6 கருத்துகள்:

 1. முத்தமிழ் மீண்டும் எப்போது சிரிக்கும்?
  முழுதாய் நம் கொடி அங்கே எப்போது பறக்கும்?

  இங்கேயும் ஒரு பெரு மூச்சு...
  நன்றாக உள்ளது நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் தமிழினி. தொடர்ந்தும் என் பக்கத்தோடு இணைந்திருங்கள்.

   நீக்கு
 2. என்றும் அழியா கறை படிந்த எம் கைகள் போரற்ற பூமி ஒன்றை உருவாக்கட்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் சுதா. தொடர்ந்தும் என் பக்கத்தோடு இணைந்திருங்கள்.

   நீக்கு
 3. விரைவில் பறக்கும்! தனி ஈழம் கிடைக்கும்!

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.