புதன், 20 ஜூன், 2012

இலட்சியக்கனவு


அகிலனும் குமுதனும் நண்பர்கள். குமுதன் சொந்த இடம் வவுனியா. அகிலனின் சொந்த இடம் கொடிகாமம். கடந்த இரண்டு வருடங்களாக அகிலன் தன் குடும்பத்தினருடன் வவுனியா சென்று வசித்து வருகிறான். 1996 இல் இடம் பெற்ற யாழ் இடப்பெயர்வுடன் கொடிகாமத்தில் இருந்து ஆறு வயது நிரம்பிய பையனாக வன்னிக்கு பெற்றோர்களுடன் இடம் பெயர்ந்திருந்தான்.

அகிலன் வன்னியில் தருமபுரத்தில் இருந்து இப்போது வவுனியா! இலங்கைத் தமிழன் என்றாலே இடப்பெயர்வு குடிப்பெயர்வு என்பது சர்வசாதரனமான விடையமகிப்போனதே. சிறு வயதில் அகிலன் தருமபுரத்தில் பாலர் கல்வியை ஆரம்பித்தான். சிறு வயதிலேயே கல்வியில் அதிக நாட்டம் இருந்தது. கல்வியில் மட்டுமல்ல விளையாட்டுகளிலும் அதிக நாட்டம் தான். இந்த கல்வி விளையடுகளில் அவனை ஊக்கம் கொடுத்து அவன் வீட்டில் வெற்றி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வாங்கி அடுக்குவதற்கு மூல காரணகர்தாவே அவன் தந்தை சிவகடாச்சம் தான். சிறு வயதிலேயே காலை 5. 00௦௦ மணிக்கு அவனை நித்திரையால் எழுப்புவர் அவர்.

“அவன் சின்னப்பிள்ளை அவனை ஏன் இவ்வளவு வெள்ளன எழுப்புறியல் “
என்பாள் அவன் அம்மா மங்கை என்னும் மங்கையற்கரசி.

“நீ சும்மா இரு இப்ப எழுப்பினால் தான் படிச்சுட்டு கொஞ்சம் எக்சசைசும் செய்யலாம்..... தம்பி..... அகில்..... அகில்..... எழும்பன..... அம்மா முட்டைகோப்பி வைச்சிருக்கா எழும்பி முகத்தை அலம்பிட்டு குடிங்கோ..... ராசா படிக்கோனுமல்லோ..... அப்பா சொல்றது கேக்குதோ.....”
அன்பாக மெதுவாக முட்டைக்கோபியை அடிப்பித்து வைத்து கொண்டு அவனை எழுப்புவார். எழும்புவதற்கு சோம்பலாக இருந்தாலும் அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு எழும்புவான் அகிலன். காலை கடன்களை முடித்து சுடச்சுட அவன் தாய் தரும் கோப்பியை ஒரே உறிஞ்சாக உறிஞ்சி விட்டு அவன் படிப்தற்கு வந்தமர காலை 5. 15 ஆகி இருக்கும். 6. ௦௦00 மணி வரை படிப்பான் குப்பி விளக்கின் ஒளியில். 6. 00௦௦ மணிக்கு சரியாக அவனது தந்தை மீண்டும் வந்து அவனை ஓடுவதற்கு அழைத்து செல்வார். அவன் வாசித்த கொட்டிலுக்கு முன்னால் இருந்த மணல் வீதியில் தந்தையும் மகனும் மெதுவாக ஓடுவர். ஓடி திரும்பியதும் அவனுக்கு சிறிது நேரம் உடற்ப்பயிற்சி சொல்லி கொடுப்பார் சிவகடாச்சம். இவை எல்லாம் முடிகின்ற போது நேரம் அனேகமாக ஏழை எட்டிகொண்டிருகும். ஓர் கால் மணி நேர இடைவேளையின் பின் தந்தையும் மகனும் குளிக்கச்செல்வர். அகிலனுக்கு அப்பாவுடன் குளிப்பது என்றால் கொள்ளை பிரியம். குளித்து வரவும் தாய் சுடச்சுட காலை சிற்றுண்டியை இருவருக்கும் பரிமாறுவார். காலையில் தாயின் முகத்தை பார்த்த படியே சாப்பாட்டை சாப்பிட்டு முடிப்பான் அகிலன். கலையில் தாயின் முகத்தில் தெய்வீக கலை தெரிவதாக அடிக்கடி கூறுவான் அகிலன். உண்மை தான் இவன் படிக்க ஆரம்பித்ததுமே தாய் சென்று குளித்து விட்டு சாமி படங்களுக்கு பூ கொய்து வந்து வைத்து விளக்கேற்றி விடுவாள். நெற்றி நிறைய விபூதியும் நடுவில் குங்குமப்பொட்டும் வைத்து இருக்கும் மங்கையை காலையில் யார் பார்த்தாலும்.... அவ்வளவு லஷ்மிகரமாக இருப்பாள் மங்கை.

அன்பான தாய் தந்தையால் வளர்க்கப்படும் எந்தக் குழந்தையின் மனமும் உடலும் எப்பொழுதும் உற்சாகமாகவே இருக்கும். அகிலனுக்கும் எந்த குறையுமில்லை. எனவே அவன் கல்வியிலும் விளையாட்டிலும் முதலிடத்தில் இருப்பது அதிசயம் இல்லையே! அத்தோடு அகிலன் வேறு ஒரு பிள்ளை சிவம் மங்கை தம்பதியினருக்கு. எனவே தாய் தந்தை அவனுக்கு கேட்டதெல்லாம்...... இல்லை இல்லை கேட்காமலே எல்லாம் செய்தனர். அதே போல் அவனும் அவர்கள் பெயரை மங்க விடாதே வாழ்ந்து வந்தான்.

வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தான். பாடசாலை மட்டம், வலய மட்டம், மாவட்ட மட்டம் என பல பரிசுகளை படிப்பிலும் விளையாட்டிலும் பெற்று வந்தான். எல்லாம் ஒரு குறித்த வயது வரைதான். அவனுக்கு பதினான்கு வயது நடக்கும் போது கடைக்குப்போன அவன் தந்தை அங்கு இராணுவத்தினரின் குண்டு வீச்சு விமானங்கள் நடாத்திய மிலேச்ச தனமான குண்டு வீச்சில் அகப்பட்டு மாண்டு போனார்.

அவனுக்கு”ஹீரோவாக” இருந்த அவன் தந்தையின் இழப்பு அவனை மிகவும் பாதித்தது. அவனை மட்டுமில்லை, அவன் தாயையும் பாதித்தது. அகிலனின் படிப்பு மெல்ல மெல்ல மங்கியது. ஆனால் விளையாட்டில் மட்டும் சிறிதளவு ஆர்வம் காட்டினான்.

காலச்சக்கரம் யாருக்காகவும் தான் சுழற்சியை நிறுத்தி வைப்பதிலையே! அது தொடர்ந்து சுழன்றது. அகிலன் தான் தாயுடன் பல இன்னல்களை அனுபவித்தான். நாட்டுச்சூழல் வேறு அவர்களை துரத்தியது. தொடர் இடப்பெயர்வுகள், பற்பல இழப்புகள்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் வவுனியா வந்து சேர்ந்தனர், அகிலும் அவனது தாய் மங்கையும். வவுனியா வந்து அங்கு தெரிந்தவர்கள் வீட்டில் இருந்து கொண்டு அகிலன் தான் படிப்பை தொடர்ந்தான்.

அவனுக்கு பள்ளியில் கிடைத்த தோழன் தான் குமுதன். குமுதனுக்கு விளையாட்டு என்றால் உயிர். அவன் பெரிதாக படிப்பில் ஒன்றும் சாதிக்கவில்லை, என்றாலும் விளையாட்டு போட்டிகளில் அவன் பெற்ற கோப்பைகள் எத்தனை, கேடையங்கள் எத்தனை, பதக்கங்கள் என்ன, சான்றிதல்கள் என்ன அப்பப்பா!!! புதிய பாடசாலையில் விளையாட்டின் சாம்பியனாக இருந்த குமுதனை கண்டவுடனேயே அகிலனுக்கு பிடித்துவிட்டது.

இருவருக்கும் பொது பொழுது போக்கு விளையாட்டு. இருவரும் பாடசாலை வெளியே ஒரே விளையாட்டு கழகத்திற்கு விளையாடுகின்றனர் கால்பந்து. கழகத்தின் பந்து காப்பாளனாக அகிலனும் முன்னிலை வீரனாக குமுதனும் விளையாடுகின்றனர். உயர் தர பரீட்சை முடிந்ததும் இருவரும் முழு முச்சாக விளையாட்டு பயிற்சியிலே காலம் கழித்தனர்.

ஒரு நாள் காலை முற்றத்தில் அமர்ந்து தாய்க்கு தான் முதல் நாள் விளையாடிய ஆட்டத்தை வர்ணனை செய்து கொண்டிருந்தான் குமுதன். அங்கே அப்பொழுது வந்த அகிலன்

“என்ன மச்சான் அம்மாவுக்கு எதோ பிரசங்கம் செய்றாய்....”
கேட்ட படியே உள்ளே நுழைந்தான்.

“இல்லடா நேற்றையான் மச்சப் பற்றி தான் சொல்லி கொண்டு இருக்குறேன். நீ என்ன திடீரெண்டு இந்த பக்கம் வந்திருக்க....?”
“இல்லைடா எங்கட சொந்தக்காரர் ஊரில ஆரோ செத்திடினமாம். அம்மா ஊருக்கு போக வேணுமெண்டவா. நானும் சொந்த ஊர பார்த்தது இல்லை தானே? அங்க எங்கட வீடு இருக்காம்... இதோட ஒருக்க போய் பார்த்துட்டு வரலாம் எண்டுதான்... உன்னட்ட சொல்லாம போனால் நீ கத்துவாய்... அது தான்...”
“என்ன யாழ்ப்பாணம் கொடிகாமத்துக்கு போறியோ! நானும் யாழ்ப்பாணம் பார்த்ததில்லை. நானும் உங்களோடு வரட்டே?...”
ஆர்வமாக கேட்டன் .குமுதன்

“நீ வாரதப்பத்தி ஒண்டுமில்லை... உண்ட அம்மாட்ட நீ முதலில பெர்மிசன் எடுகோனும்....”
என்றவனை இடைமறித்தபடி வந்தாள் குமுதனின் தாய் கையில் அகிலனுக்கு தேனீரோடு

“என்ன யாழ்ப்பாணத்துக்கு தானே? வடிவா போட்டு வாங்கோ... ஏன் அகில் உங்கட அம்மாவும் வாரா தானே... பிறகென்ன...”
என்று தன் சம்மதத்தை தந்தார் குமுதனின் தாய். நண்பர்களின் மகிழ்சிக்கு எல்லை கடந்தது.

உற்சாகமாக பயண ஏற்பாடுகளை செய்தனர். ஒரு வாரம் யாழில் தங்குவதற்கு முடிவு. அன்று மாலையே வவுனியாவில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டனர் அகிலனும், குமுதனும், மங்கையும்.
இரவு யாழ் சென்று சேர்ந்த அவர்கள், மறு நாள் மரண வீட்டிற்கு சென்றனர். அதற்கு அடுத்த நாள் கொடிகாமத்தில் அகிலன் குடும்பத்தினற்கு சொந்தமான தென்னக்கணியை பார்க்க சென்றனர்.

நீண்ட காலம் பராமரிக்க சரியானவர்கள் இல்லாததால் காணி சிதிலமடைந்து காணப்பட்டது. ஆனால் மரங்களுக்கு மட்டும் ஒற்றையடி பாதை காணப்பட்டது. யாரோ களவாக தேங்காய் பிடிங்கியவர்கள் அந்த பாதையை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.

நண்பர்கள் இருவரும் ஒருவர் மரத்தில் ஏறி இளநீர் பறித்து போட்டு இறங்கி வர இருவரும் ஆசை தீர இளநீர் பருகினர். பின்னர் இளநீர் கோம்பையினால் ஒருவருக்கொருவர் செல்லமாக துரத்தி அடித்தனர். 
அகிலன் அங்கிருந்த சிறிய பற்றைகளை பாய்ந்து கடந்து ஓட குமுதன் அவனை துரத்தினான்.


“படார்....”
என பலமான ஓசை தொடர்ந்து,

“ஐயோ அம்மா...”

அலறிய படி கிழே விழுந்தான் குமுதன். நீண்ட காலமாக மண்ணில் புதைந்து விழித்திருந்த ஓர் நிலக்கண்ணி தான் வேலையை காட்டி இருந்தது. குமுதனின் அலறல் கேட்டு ஓடி வந்தான் அமுதன். மீண்டும்

“படார்...”

“ஐயோ.... அம்மா.... ஐயோ....”

இப்பொது அகிலன், அந்த காணியில் இருந்த இன்னுமொரு கண்ணிவெடி தன் வேலையை காட்டி இருந்தது. விழுந்த அகிலன் கையில் ஓர் வெளிறிய மட்டை தட்டுப்பட்டது. எடுத்துப் பார்த்தான் அதில் ‘மிதி வெடி அபாயம்’ என காணப்பட்டது.

கால்பந்தில் தேசிய ரீதியில் பிரகாசிக்க வேண்டும் என்ற இலச்சிய கனவுடன் இருந்த இவர்களுக்கு கால்களே இல்லையே..... என்ன செய்வது இறைவா? வல்வையூரான்

Post Comment

8 கருத்துகள்:

 1. உருக்கமான கதை ஆனால் பழைய வடிவம் நேரடியாக கதை சொல்லும் பாணியை தவிர்த்து நவீன வடிவங்களை கையாள முயற்சியுஙகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே. உங்கள் கருத்துக்களை கவனத்தில் எடுக்கிறேன். தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறேன்.

   நீக்கு
 2. கதையின் முடிவில் மனம் கனக்கிறது !! //இலங்கைத் தமிழன் என்றாலே இடப்பெயர்வு குடிப்பெயர்வு என்பது சர்வசாதரனமான விடையமகிப்போனதே.// :( எனக்குள் இரு சந்தேகங்கள் தலைநீட்டுகின்றன கன்னிவெடிகள் யாரால் வைக்கப்படுகின்றன !!
  1.தமிழ் மக்களை கொல்ல வேண்டும் என்பதற்காகவா ??,
  2.இந்த எச்சரிக்கை போர்டுகள் யாரால் வைக்கப்படுகின்றன !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் துரை. உண்மைகள் கனக்கக்கூடியவைதான். என்ன செய்வது.

   சரி உங்களை சந்தேகங்களுக்கு வருகின்றேன்.
   கண்ணிவெடிகள் இருபகுதியினராலும் பரஸ்பரம் புதைக்கப்பட்டவை. தமிழ்த்தரப்பால் புதைக்கப்பட்டவை அனேகமாக அகற்றப்பட்டு விட்டிருந்தன. ஆனால் படைத்தரப்பால் வேண்டுமென்றே அவை அகற்றப்படவில்லை. பாதிக்கப்படுவது தமிழரே. கண்ணிவெடிகள் உயிரைப் போக்குவது அரிதாக இருந்தாலும் கால்களை இழக்கச்செய்யும் கண்டிப்பாக.

   எச்சரிக்கைப்பலகைகள் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள், கண்ணிவெடி அகற்றும் குழுவினர் ஆகியோர் வைத்தனர்.

   நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.