வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

சந்நிதி வேலவனே

சந்நிதி வேலவனே 
சஞ்சலம் தீர்ப்பவனே
ஆலிலை அமுதுன்பவனே
அமரர்களுக் கருள் செய்பவனே
கோலெடுத்து தண்டபாணியாய் நின்றவனே
கோபித்து ஞானப்பழ்னி சென்றவனே

மாங்கனிக்காய் மயிலேறிச் சென்றவனே
மாது வள்ளிக்காய் தினைப்புனமேறி வந்தவனே

வேதியனாய் பின் வேங்கை மரமாகி நின்றவனே
வேலாகி தொண்டைமானா ராமர்ந்தவனே

வாய்கட்டி பூசை ஏற்றவனே
வாசலெங்கும் காவடிகள் கொண்டவனே

அன்னதானக் கந்தனே
ஆற்றங்கரை அருகமர்ந்தவனே

பூவரசமரம் கொண்ட புண்ணியனே
பூசை முறைக்கு கதிர்காமம் காட்டியவனே

மருதர் கதிர்காமரோடமர்த்து கதைத்தவனே
மாசிலா முகமாறு கொண்டவனே

நெடுந்தேரேறி வந்தவனே
நேசமாய் தெய்வயானையை மணந்தவனே

புதுமைகள் எல்லாம் கொண்டவனே
புலத்திலும் எம்மை காத்தருள்வாய்

வல்வையூரான் 

Post Comment

6 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் சந்நிதியானுக்கு ஒரு பாமாலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே. தொடர்ந்து வாருங்கள்.

      நீக்கு
  2. புதுமைகள் எல்லாம் கொண்டவனே
    புலத்திலும் எம்மை காத்தருள்வாய்

    பதிலளிநீக்கு
  3. சந்நிதியான் அற்புதத்தை தூரத்து பக்தன் எழுதுவதை விட அனுபவித்த நீங்கள் எழுதுவதே சிறப்பு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கோ அப்பு குட்டி வரவேற்கின்றேன் கருத்தையும் வரவையும்.

      நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.