
மணி ஒலித்தோய்ந்த்து
பனித்தன கண்கள்
காத்திகை 27.

கலைந்தது மௌனம்
மலர்ந்தன தீபங்கள்
மாவீரர் நாள்.

காந்தள்கள் முகம் சிரித்தது
கைகளில்
கார்த்திகைத் தீபம்.
கோபுரங்கள் இல்லையெனினும் கோயில்கள்
கல்லறைத் தெய்வங்கள்
துயிலுமில்லங்கள்.
எதிரி கிளரியெறிந்ததால்
மனதில் கிளர்ந்தெழுந்தது
மாவீரர் தியாகங்கள்.
வல்வையூரான்
Tweet | ||||
அழகு....
பதிலளிநீக்குநன்றிகள் சிட்டு.
நீக்குமாவீரர் நாளை ஒட்டி
பதிலளிநீக்குஅவர்களின் தியாக
உருவங்களை கண்முன்னே
கொண்டுவரும்
அழகிய துளிப்பாக்கள் சகோதரரே....
உங்களுடன் இணைந்து
எல்லோருக்கும் நல்வழி பிறந்திட
என்னுடைய பிரார்த்தனைகளும்..
நன்றிகள் அண்ணா. வரவுக்கும் கருத்துக்கும்.
நீக்குசொல்லமுடியவில்லை எனக்கு முகுந்தன்.சின்னதா சுருக்கமா இப்பிடிச் சொல்லமுடியுமா உணர்வுகளை.அருமை அற்புதம்.தொடருங்கள் !
பதிலளிநீக்குநன்றிகள் அக்கா. சந்தோசமாக இருக்கிறது. ஒரு கவிதாயினியிடம் இப்படி கேட்க.
நீக்குபல விசயங்களை உணர்த்துகிறது..
பதிலளிநீக்குவணக்கம் வாங்கோ விக்கி அண்ணா. முதல் வரவு. உங்களை இங்கே கண்டது மகிழ்ச்சியே. தொடர்ந்து வாருங்கள் அண்ணா.
நீக்கு
பதிலளிநீக்குகோபுரங்கள் இல்லையெனினும் கோயில்கள்
கல்லறைத் தெய்வங்கள்
துயிலுமில்லங்கள்.//
காவல் தெய்வங்களும் கூட....
அருமையாகச் சொல்கிறீர்கள்
பதிலளிநீக்குஉணர்வைத் தொடும் அருமையான கவிதைகள்
தொடர வாழ்த்துக்கள்
நன்றிகள் ரமணி அண்ணா. இடையில கொஞ்ச நாளா கண்ல உங்களை இந்த பக்கம்.
நீக்கு