வெள்ளி, 23 நவம்பர், 2012

கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள்தாயின் வயிறு விட்டு 
தரணிக்கு வந்த 
தமிழ்த் தாயின் குழந்தைகள் நீங்கள்தலைவன் அணி சேர்ந்து
தன்னையே தந்து
தமிழினம் காத்த காவல்தெய்வங்கள் நீங்கள்

விண்ணிலும் வென்று மீண்டு
விளையாட்டாய் சமராடி
வியக்க வைத்த வித்தகர்கள் நீங்கள்

கடலிலும் காவியம் படைத்து
கலங்களையும் வென்று
கடலலையென ஆர்ப்பரித்த கற்பூரங்கள் நீங்கள்

தரைவழி வந்த பகைக்கு
தலையிடி கொடுத்து
தம்மையே ஆகுதியாக்கிய தற்கொடையாளிகள் நீங்கள்

கார்த்திகை மாதங்களில் வந்து
கண்விழித்துக் காட்டி 
கார்த்திகைப்பூவில் சிரிக்கும் கண்மணிகள் நீங்கள்.

பாடல்களின்  கருவாகி நின்று
பகையதை ஒடுக்கிய
பண்பாளர்கள் மண்ணில் விதையானமாவீரர்கள் நீங்கள். 
வல்வையூரான் 

Post Comment

13 கருத்துகள்:

 1. சுதந்திர தாகம்
  அகத்தில் கொண்டு
  காவல் நின்ற தெய்வங்களுக்கு
  அழகிய கவிதை சகோதரரே..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் அண்ணா வரவுக்கும் கருத்திடலுக்கும்.

   நீக்கு
 2. ஒவ்வொரு வரியும் கார்த்திகை பூவை போல் உள்ளது வாழ்த்துக்கள் சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள சகோ. முதல் வருகை. வரவேற்கின்றேன். தொடர்ந்து அடிக்கடி வாருங்கள் வந்து உங்கள் மேலான கருத்துக்களைத் தாருங்கள். நன்றிகள் சகோ வரவுக்கும் கருத்திடலுக்கும்.

   நீக்கு
 3. கார்த்திகை வீரர்களின் நினைவுகளை மீட்டும் அழகிய கவிதை நன்றி பகிர்வுக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் நண்பா வரவுக்கும் கருத்திடலுக்கும்.

   நீக்கு
 4. உங்களுடன் இணைந்து, தாயக விடுதலைக்காய் வித்தாகிப்போன அனைவரையும் அன்புடன் நினைவுகூர்வோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் மாமா வரவுக்கும் கருத்திடலுக்கும்.

   நீக்கு
 5. கடலிலும் காவியம் படைத்து
  கலங்களையும் வென்று
  ////////////

  கலம் என்று எதைக் குறிப்பிடுகிறீர்களோ..
  களம்... இதுவா

  புரியவில்லை எனக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் சிட்டுக்குருவி வரவு. கலம் என நான் இங்கு குறிப்பிட்டது கடற்கலம் - கப்பல் என்பதையே.

   நீக்கு
  2. புரிந்து கொண்டேன் தெளிபடுத்தியமைக்கு நன்றிகள் கோடி

   நீக்கு
 6. கார்த்திகையில் மட்டுமல்ல என்றுமே எம் மூச்சோடு வாழும் தெய்வங்கள்.மறவோம் மறவர்களே !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அக்கா வரவுக்கும் கருத்துக்கும்.

   நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.