புதன், 21 நவம்பர், 2012

ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம்


தமிழே உயிரே தலைதாழ்த்தியொரு வணக்கம்
தரணியில் உனக்கென்றொரு நாட்டுக்கென்ன சுணக்கம்
தண்ணொளி மண்ணிலின்று உன்னவர்களுக்குலில்லை இணக்கம்
தரங்கெட்ட மனிதராய் தமிழர்களுக்குள்ளே பிணக்கம்.தமக்கென வாழாது நமக்கென மாண்டவர்கள்
தன்னலம் பாராது சமராடிய தாண்டவர்கள்
தமிழ்த்தாய் மீது அழியாப்பாசம் பூண்டவர்கள்
தரணியிதில் மாவீரரென்று பேர்கொண்ட ஆண்டவர்கள்.மங்காத வீரமுகம் தன்னை கொண்டவர்கள்
மகிழ்வாக தலைவன் அடியொற்றி நின்றவர்கள்
மண்டியிட்டு மாற்றான்பாதம் தொழுதிடா மன்னவர்கள்
மறப்பரோ அவர்தம் மாண்புகளை எம்மவர்கள்.


ஆண்டுகள் சிலஓடி போனது இன்று
அவனியில் தமிழினம் ஆனது துண்டு
அன்னவர்கள் வாரமிது ஆகிடுவோம் ஒன்று
அன்பாலே ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம் நன்று.


வல்வையூரான்.
Post Comment

4 கருத்துகள்:

 1. விடுதலைக்காய் தன் உயிர் விடுத்தவர்கள்...
  நினைவூட்டல் நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக தன்னலம் பாராத அவர்களை ஒற்றுமையாக நினைக்க வேண்டும் நண்பா.

   நீக்கு
 2. தண்ணொளி மண்ணிலின்று உன்னவர்களுக்குலில்லை இணக்கம்
  தரங்கெட்ட மனிதராய் தமிழர்களுக்குள்ளே பிணக்கம்.

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.