வியாழன், 10 ஜனவரி, 2013

ஹைக்கூக்கள் 6
விளக்குகளும் மங்கிபோகும்
விந்தை விடியல்
காதல்

தினமும் கிழிக்கப்படுவது
கடதாசிகள் அல்ல
உன் ஆயுள்


விழி அம்பெறிகையில்
விபத்துக்குள்ளானது
விழுந்தவன் இதயம்மயங்கியது மனது
மகிழ்ச்சியில்
இசை.


பலமான ஆயுதம் தான் பெண்களிடம்
ஆண்களுக்கேதிராய்
மௌனம்.


கடலலை எழுந்து எட்டாண்டு
இன்றும் கடல்வெள்ளம்
கண்களில் ஆழிப்பேரலை.


பொங்கி எழுந்ததால்
மங்கியது வாழ்வு
சுனாமி.


தடக்கி விழுகையில் பிடிப்பதும்
தள்ளி விடுவதும்
நட்பே.


வீடுகளில் செக்கலென்றால் அழுகை
விருந்தேதும் தெரிவதில்லை கண்ணில்
விசித்திரம் - தொலைக்காட்சி நாடகங்கள்.

வல்வையூரான் . 
Post Comment

6 கருத்துகள்:

 1. அருமையான ஆழமான சிந்ததையுடன் கூடிய
  கவிதைகள் மனம் கவர்ந்தது.
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ ரமணி அண்ணா. உங்கள் கருத்துக்கள் உற்சாகப்படுத்துகின்றது. நன்றிகள்.

   நீக்கு

 2. வணக்கம்!

  பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
  எங்கும் அளிக்கட்டும் ஈந்து!

  பதிலளிநீக்கு
 3. அருமையாக இருக்குது
  குறுங்கவிதைகள்...
  படங்களுடன் சேர்த்து பார்க்கையில்
  திரும்ப திரும்ப படித்தேன்...
  அவ்வளவு அழகு...

  பதிலளிநீக்கு
 4. அருமையான சிந்தனை துாண்டும் கவிதைகள்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.