திங்கள், 31 டிசம்பர், 2012

புதுவருடம்விடை ஒன்று கொடுத்து 
புதியதை வரவேற்று
விண்ணுக்கும் மண்ணுக்கும் 
துள்ளினர் ஒருபால்


வித விதமாக,
விழிகளை உயத்த வைத்த
விலை கொண்ட 
ஆடையர் ஒருபால்

கடிகார முள்ளை
கன நேரமுற்று
காத்திருந்து கையிலிருந்த
வெடிதனை வெடித்தோர் ஒருபால்
பெடிகளாய் நின்று
கும்மி குத்தி
பெண்கள் பக்கம் திரும்பி
இளித்தவர் ஒருபால்

கைகள் வலிக்க வலிக்க
கஷ்டம் பார்க்காமல்
கனகதியில் SMS
அனுப்பினர் ஒருபால்

லட்டு ஜிலேபி என்று
பட்சணங்கள் உண்டு
பக்கத்துக்கு வீட்டுக்கு தந்து
பறை சாற்றியோர் ஒருபால்
பீர் ஒரு கையில்
பிகர் ஒரு கையில் என்று
பின்விளைவுகள் அறியாது
சுத்தினர் ஒருபால்.

தேரடி வீதியிலும்
திரும்பிய திசைகளிலும் 
சந்தோசம் கொப்பளிக்க
இருந்தனர் இவர்கள்

ஊரது ஒதுங்கிய இடத்தில்
ஒலைக்குடிசைக்குள்ளே 
ஒன்றிலும் லயிக்காது 
ஒதுங்கி இருந்தவன் ஏழை.
வல்வையூரான்.

Post Comment

7 கருத்துகள்:

 1. பீர் ஒரு கையில்
  பிகர் ஒரு கையில் என்று
  பின்விளைவுகள் அறியாது
  சுத்தினார் ஒருபால்.
  //////////////////

  உண்மை வரிகள்..:)
  அழகான கவிதை
  உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் தம்பி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் என் வாழ்த்துக்கள்

   நீக்கு
 2. கொண்டாட்டத்தின் கூக்குரலில்.. ஏழையின் முனகல் எங்கே கேட்க போகிறது..? சமூக உணர்வை அழகாய் சொல்லி விட்டீர்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது உண்மைதான் உஷா. உங்களுக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

   நீக்கு
 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  பதிலளிநீக்கு
 4. அருமையான கவிதை வாழ்த்துக்கள்.

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.!

  பதிலளிநீக்கு
 5. ///ஊரது ஒதுங்கிய இடத்தில்
  ஒலைக்குடிசைக்குள்ளே
  ஒன்றிலும் லயிக்காது
  ஒதுங்கி இருந்தவன் ஏழை./// உண்மைதான்... இவர்களுக்கு மட்டும் எல்லா வருடங்களும் ஏன் ஒரே மாதிரிப் பிறக்கின்றன... கவிதை அருமை. புதுவருட வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.