செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

ஹைக்கூகள் 8மலரே மலர்களுள் தேடினேன் கொடுப்பதற்கு 
கிடைக்கவில்லை 
உன்போன்ற அழகான மலர்.


கடையடியில் புகைந்தது அணைந்தது 
தெரு முனையில் 
நீ.


மரணம் கூட மகிழ்வாய் தெரிந்தது 
என் மனதில் 
மட்டுமே நீ ...


வந்த களைப்பு பறந்தது
கண்டேன்
காத்திருந்த உன்னை.


கடிகாரம் நிற்பதேயில்லை
நின்றிருந்தது
அவள் பக்கம் இருக்கையில்

வல்வையூரான் 

Post Comment

10 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாருங்கள் பிரேம் . முதல்வருகை. வரவேற்கின்றேன். நன்றிகள் வரவுக்கும் கருத்துக்கும்.

   நீக்கு
 2. மிகவும் அமைதியாக உள்நுழைகிறது முதலாவது துளிப்பா. வாழ்த்துக்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 3. ஆஹா அழகழகான கவிதைகள் இங்கே கவி பாடிட்டு இருக்கே...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கோ மனோ அண்ணா. அடிக்கடி எட்டிப்பாருங்கோ. நன்றிகள் அண்ணா வரவுக்கும் கருத்துக்கும்.

   நீக்கு

வணக்கம்

உங்கள் கருத்துக்கள் என்னை வளப்படுத்தலாம்.
எனவே உங்கள் மேலான கருத்துக்களை இங்கே தாருங்கள்.